பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்யத் தடை – சுப்ரீம் கோர்ட்

பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்யத் தடை – சுப்ரீம் கோர்ட்

ஊரடங்கு காலத்தில் BS-4 வாகனங்கள் அதிகளவில் விற்பனையானதற்கு அதிருப்தி தெரிவித்து உள்ள சுப்ரீம் கோர்ட், அவ்வகை வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது.

பிஎஸ்-4 ரக வாகனங்கள் மாசு ஏற்படுத்துவதால் அதன் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2020 ஏப்ரல் மாதத்துக்கு பின் இவ்வகை வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி ஆட்டோ மொபைல் சங்கத்தினர், மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிஎஸ் 4 வாகனங்களை மேலும் 30 நாட்களுக்கு விற்பனை செய்து கொள்ளலாம் எனவும், ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் வழக்கத்தை விட அதிகமான பிஎஸ் 4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். மறு உத்தரவு வரும் வரை, பிஎஸ் 4 வாகன பதிவுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!