‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்பட முன் வெளியீட்டு விழாச் செய்தி!
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ‘ஜோ’ படத்தின் வெற்றிக் கூட்டணி யான ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மாலில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய முக்கிய அம்சங்கள்:
இயக்குநர் மிஷ்கின்:
- “ஆண்பாவம் என்ற வார்த்தை பாண்டியராஜன் சார் படமெடுத்த போது தான் தெரிந்தது. இப்போது இந்தக்குழு பொல்லாததைச் சேர்த்து, ‘ஆண் பாவம் பொல்லாதது’ எனப் படமெடுத்துள்ளார்கள்.”
- “தயாரிப்பாளர் விஜயன், ‘இந்தப்படம் உங்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும், ஆனால் கடைசியில் அழ வைத்துவிடும்’ என்று சொன்னார். ஒரு தயாரிப்பாளர் இந்த அளவு இயக்குநரை நம்புவது ஆச்சரியம்.”
- “டிரெய்லர் பார்த்தேன், மாளவிகாவை பார்க்கப் பக்கத்து வீட்டுப் பெண் போல அவ்வளவு பந்தமாக இருக்கிறார். வாழ்த்துக்கள். ரியோ ராஜ் இனி ரியோ என வைத்துக்கொள்ளலாம், அழகாக உள்ளது. லியோ மாதிரி ரியோவும் அழகாக உள்ளது. ரியோவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.”
நடிகை மாளவிகா மனோஜ்:
- “இயக்குநர் கலையரசன் அண்ணாவிற்குத் தான் முதல் நன்றி. அவர் இல்லை என்றால் இந்தப்படத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். பொறுமையாக டயலாக் சொல்லித் தந்து, நடிக்க வைத்தார்.”
- “ரியோ என்னோட நல்ல ஃபிரண்ட். மொழி தெரியாத போதும், முதல் படத்திலிருந்து நன்றாகப் பார்த்துக் கொண்டார்.”
- “சித்து குமார் என் கேரியரில் மிகச்சிறந்த பாடலை (‘உருகி உருகி’) தந்துள்ளார். எங்கே போனாலும் உருகி உருகி ஹீரோயின் என்று தான் சொல்கிறார்கள்.”
- “ஆண் மட்டும் பாவம் இல்லை, பொண்ணுங்களும் பாவம் தான் என்பதும் படத்தில் இருக்கிறது. இந்தப்படம் மிக அழகான படம், அனைவரும் ஆதரவு தாருங்கள்.”
நடிகர் ரியோ ராஜ்:
- “இங்கு வந்து வாழ்த்திய வசந்த் சார், பொன்ராம் சார், மிஷ்கின் சாருக்கு நன்றி. இந்தப் படம் நன்றாக வர Drumsticks Productions-க்கு நன்றி. இந்த நிறுவனத்தில் நான்கு தயாரிப்பாளர்கள் இருந்தாலும், எல்லோரும் நண்பர்கள் போல ஜாலியாகப் பழகினார்கள்.”
- “சிவா எழுதியதை, கலையரசன் தங்கவேல் மிக அட்டகாசமான படமாக எடுத்துள்ளார். சித்து குமார் எங்களின் பலம். ‘உருகி உருகி’ பாடல் இப்போது எங்களின் அடையாளமாகவே ஆகிவிட்டது.”
- “மாளவிகா மனோஜ் டயலாக் அதிகம் என்பதால் ஆடிசன் செய்தோம். சூப்பராக நடித்துள்ளார். அவர் டிசிப்ளினான ஆக்டர்.”
- “ஆண் பாவம் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் சந்தோசமாக இருக்க என்ன பண்ணனும் என்பதை, ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினராகச் சொல்லியுள்ளோம்.”

இயக்குநர் கலையரசன் தங்கவேல்:
- “இந்தப்படத்தைக் கதையாக ஒரு மாதத்தில் எழுதியவர் சிவா (சிவக்குமார் முருகேசன்). அவரே எடுத்திருக்கலாம். ஆனால் கலை இதைச் செய்யட்டும் என விட்டுக்கொடுத்த சிவக்குமார் முருகேசன் சாருக்கு நன்றி.”
- “எங்களுக்கு இருக்கும் ஒரே ஆட்டோ, ரியோ அண்ணன் தான். அவரை நாங்கள் விடமாட்டோம், அவர் ஹீரோ மட்டும் அல்ல, அவர் ஒரு துணை இயக்குநர் போலத் தான் இருப்பார்.”
- “மாளவிகா நடிப்பாரா? என ஆடிசன் செய்தோம். ஆனால் அப்போதே அவர் தான் என முடிவு செய்து விட்டோம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.”
- “இப்படம் ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினர். அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”
படத்தின் தொழில்நுட்பக் குழு:
- தயாரிப்பு: வெடிக்காரன்பட்டி S சக்திவேல் (Drumsticks Productions)
- இசை: சித்து குமார்
- ஒளிப்பதிவு: மாதேஷ்
- வெளியீடு: AGS CINEMAS
இத்திரைப்படம் குடும்ப வாழ்க்கையின் சந்தோஷங்களைச் சொல்லும் ஒரு கலகலப்பான படைப்பாக வரும் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


