32°C
விளம்பரம்
Advertisement

நியூயார்க் டைம்ஸ் vs ஓபன்ஏஐ:காப்பிரைட் போரில் ஏஐ-க் கு ஆதரவாக அமெரிக்கா!

admin Published: September 3, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


செயலி என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள ‘நியூயார்க் டைம்ஸ் vs ஓபன்ஏஐ’ பதிப்புரிமை (Copyright) வழக்கில், டிரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறை (DOJ) அதிரடியாக நுழைந்துள்ளது. மில்லியன் கணக்கான செய்தித் தாள்களின் கட்டுரைகளை அனுமதி இன்றி எஐ பயிற்சிக்காகப் பயன்படுத்திய ஓபன்ஏஐ நிறுவனத்தின் நடவடிக்கை ‘நியாயமான பயன்பாடு’ (Fair Use) வரம்பிற்குள் தான் வருகிறது என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது அமெரிக்க அரசு. பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளுடன் ஒப்பிடும்போது, இதில் ஏற்படும் வணிக ரீதியான பாதிப்புகள் மிகவும் குறைவு என்பதே அமெரிக்க அரசின் வாதம்.

தேசிய பாதுகாப்பு ஆயுதமாக மாறும் செயற்கை நுண்ணறிவு

அமெரிக்க நீதித்துறை இதோடு நின்றுவிடவில்லை. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் வெறும் தொழில்நுட்பக் கருவிகள் மட்டுமல்ல, அவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உலகளாவிய தகவல்களை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்ய உதவும் மிக முக்கியமான ஆயுதம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, பதிப்புரிமை மற்றும் காப்பிரைட் உரிமைகளைக் கடுமையாக வலியுறுத்துவது அமெரிக்காவின் செழிப்புக்கும் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என்ற மறைமுகமான எச்சரிக்கையையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது.

நியாயமான பயன்பாடும் தூக்கி எறியப்பட்ட சட்ட விதிகளும்

சட்டப்படி ‘நியாயமான பயன்பாடு’ என்பதைத் தீர்மானிக்க நான்கு முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்படும். பயன்பாட்டின் நோக்கம், படைப்பின் தன்மை, பயன்படுத்தப்பட்ட தகவலின் அளவு மற்றும் சந்தையில் அதனால் ஏற்படும் தாக்கம் ஆகியவையே அவை. ஆனால், தற்போது அமெரிக்க அரசு இந்த நான்கு விதிகளையும் தாண்டி ‘இந்த எஐ தொழில்நுட்பம் அமெரிக்காவிற்கு உதவுமா?’ என்ற ஐந்தாவது புதிய காரணியை உருவாக்கியுள்ளது. இந்த ஐந்தாவது காரணிக்கு ஓகே என்றால், பழைய நான்கு சட்ட விதிகளும் செல்லாது என்ற நிலையை உருவாக்க அரசு முயல்கிறது.

அமெரிக்க கொடியைப் போர்த்திய கார்ப்பரேட் ஆதரவு

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் கடுமையாக விமர்சித்துள்ளது. படைப்பாளிகளின் உழைப்பைத் திருடிய டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எஐ நிறுவனங்களின் பக்கமே அரசு நிற்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது சட்ட ரீதியான வாதம் அல்ல; மாறாக உலகளவில் எஐ ஆதிக்கத்தைப் பிடிப்பதற்கான ஒரு புவிசார் அரசியல் (Geopolitical) நகர்வு. சர்வதேச எஐ போட்டியில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடிக்க, பதிப்புரிமைச் சட்டங்கள் ஒரு வேகத் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்கக் கொடியை முன்வைத்து அந்தத் தடையை நீக்க நீதிமன்றத்திற்கு அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.

உடனடி செய்திகள்