சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நிர்ணயம்!

சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நிர்ணயம்!

ரியாக 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிங்காரச் சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2003ல் சென்னையில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் என்பது நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது பகல் வேளையில் ஆட்டோக்கள் 25 கிமீ, கனரக வாகனங்கள் 35 கிமீ, இருசக்கர வாகனங்கள் 50 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்து அது காற்றில் பறக்க விடப்பட்டது. ஆனாலும் .சென்னையில் அதிகரித்து வரும் விபத்து மற்றும் வீதிமீறல்களை கட்டுபடுத்த போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அடுத்தகட்டமாக வருகின்ற 5ஆம் தேதி முதல் மீண்டும் சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு அமலுக்கு வருவதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்தது. சென்னையில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது.. , சென்னை பெருநகர காவல் எல்லையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடு அமல்படுத்ததப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி 40 கி.மீ வேகம் வரை செல்லலாம். இரு சக்கர 50 கி.மீ வேகம் வரை செல்லலாம். மேலும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகனங்களின் இந்த வேகத்தை நிர்ணயம் செய்வதற்காக தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் இதற்கு முன்பே 6 பேர் கொண்ட குழுவை அமைத்து இருந்தார். இந்த குழு மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு செய்தன. அதோடு ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்டவர்களுடன் உதவியுடன் சென்னையில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இந்த குழு தயாரித்த அறிக்கை சென்னை போக்குவரத்து போலீஸ் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த புதிய வேக கட்டுப்பாடு அமல்படுத்தப் படுத்தப்படுகிறது.

இனி மேற்கூறிய வாகனங்களில் சென்னையில் பயணம் செய்யும்போது குறிப்பிட்ட அந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டுள்ள வேக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அபராதம் குறித்த தகவல் வந்து விடும் ஆபத்து உள்ளது . கடந்த சில மாதங்களுக்கு முன்பே சென்னையில் 40 கிமீ வேகத்தை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்திகள் பரவியது. ஆனால் இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில் வரும் 4ம் தேதி முதல் இந்த வேக கட்டுப்பாடு நடைமுறை அமலுக்கு வருவது உறுதியாகி உள்ளது. குறிப்பிடத்தக்க்து

error: Content is protected !!