புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு – பெயர் எச்.டீ.110067

புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு – பெயர் எச்.டீ.110067

மது சூரிய குடும்பம் போல், எந்த வெடிச்சிதறல்களும் மோதலும் இல்லாமல் உருவாகியுள்ள, “நேர்த்தியான சூரிய குடும்பம்” ஒன்றை வான்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த சூரிய குடும்பம் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஆறு கிரகங்களைக் கொண்டுள்ளது. 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அந்த ஆறு கிரகங்களின் அளவு மாறாமல் அப்படியே உள்ளது.இந்த சூரிய குடும்பத்தில் எந்த மோதலும் நிகழாததால், இந்த உலகங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவற்றில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்கு ஏற்றதாக அமைகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மிகச் சிக்கலான அறிவியல் கண்டுபிடிப்புகளை, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அறிவியலாளர்களுக்கு, அவற்றின் அறிவியலை விளக்குவதற்கான ஒரு களமாகவும் அறிவியல் கோட்பாடுகளை எளிய மக்களும் விளங்கிக்கொள்ளும் சீரிய மொழியில் வழங்குவதாகவும் அமைந்த நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:–

புதிதாக விண்வெளி ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள புதிய சூரிய குடும்பம் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஆறு கிரகங்களைக் கொண்டுள்ளது. 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த சூரிய குடும்பத்திலுள்ள 6 கிரகங்களின் அளவும் மாறாமல் அப்படியே உள்ளது. இந்த சூரிய குடும்பத்தில் எந்த மோதலும் நிகழாததால், இந்த உலகங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவற்றில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்கு ஏற்றதாக அமைகின்றன.

பூமி இருக்கக்கூடிய நமது சூரிய குடும்பம் உருவானது ஒரு வன்முறைச் செயல்முறை. கோள்கள் உருவாகும்போது, ஒன்றுடன் ஒன்று மோதி, சுற்றுப்பாதையில் தொந்தரவு செய்து, வியாழன் மற்றும் சனி போன்ற ராட்சச கிரகங்களோடு பூமி போன்ற சிறிய கிரகங்கள் இருக்க வேண்டிய சூழல் உருவானது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சூரிய குடும்பத்திற்கு HD110067 என வானியல் வல்லுநர்கள் பெயரிட்டுள்ளனர்.

கோள்கள் ஒரே அளவில் இருப்பது மட்டுமல்லமால் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை போல் அல்லாமல், இந்த புதிய சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் ஒத்திசைவில் சுழல்கின்றன. உள் கிரகம் நட்சத்திரத்தை மூன்று முறை சுற்றி வர எடுக்கும் நேரத்தில், அடுத்த கிரகம் இரண்டு முறை சுற்றி வருகிறது. மேலும் அந்த அமைப்பில் நான்காவது கிரகத்திற்கு வெளியே செல்கிறது. அங்கிருந்து, கடைசி இரண்டு கோள்களின் சுற்றுப்பாதை வேகத்தின் 4:3 மாதிரியாக மாறுகிறது.

இந்த சிக்கலான கிரக நடன அமைப்பு எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்றால், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் அவற்றின் சுற்றுப்பாதை காலங்களுக்கும் பொருத்தமான குறிப்புகள் மற்றும் தாளங்களுடன் ஒரு இசைத் துண்டை உருவாக்கியுள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரஃபேல் லுக், இந்த புதிய சூரிய குடும்பமான HD110067 என்பதை “நேர்த்தியான சூரிய குடும்பம்” என்று விவரித்துள்ளார்.

error: Content is protected !!