உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம்! – நெதர்லாந்தில் உருவாக்கம்

உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம்! – நெதர்லாந்தில்  உருவாக்கம்

பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம் நெதர்லாந்தில் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 3-டி பிரின்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் பாலம் இதுவே ஆகும். இந்தப் பாலத்தை சைக்கிள் ஓட்டுபவர்களும், நடந்து செல்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Nederland, Gemert. De eerste volledig constructief 3D-geprinte, voorgespannen betonnen fietsbrug ter wereld is vandaag officieel in gebruik genomen. Het project is in opdracht van de Provincie Noord-Brabant uitgevoerd.
De fietsbrug die uit 800 laagjes betonmortel bestaat, is 8 meter lang, weegt 27 ton en is over de Peelse Loop geplaatst. De brug is laagje voor laagje geprint op een betonprinter door medewerkers van de Technische Universiteit in Eindhoven onder leiding van hoogleraar Theo Salet in het laboratorium van de universiteit. Er zijn veel voordelen aan deze manier van bouwen zoals een vermindering aan activiteiten in de voorbereidingen. Hierdoor is dit concept minder arbeidsintensief te noemen, is er minder materiaal nodig en hoeft er ook geen mal / bekisting te worden gebouwd waarin het beton wordt gestort. Tevens levert deze manier van bouwen minder afval en doet het minder beroep op schaarse grondstoffen. De brug is geplaatst door BAM infra. In de toekomst zullen bruggen waarschijnlijk op locatie geprint worden.

3-டி பிரிண்டர் தொழிநுட்பத்தை பயன்படுத்தி சமீப காலங்களில் நிறைய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான பொருட்கள் என நிறைய சிறிய சிறிய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3-டி பிரின்டிங் தொழிநுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று நெதர்லாந்தின் ஜமார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 95 சதவிகிதம் 3-டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 5 சதவிகிதம் கான்கிரீட் மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் சிறியதாக இருந்தாலும் இது மிகவும் வலுவானது எனக் கூறப்படுகிறது.

இந்தப் பாலம் 40 டிரக்குகளை ஒரே நேரத்தில் தாங்கக் கூடிய அளவிற்கு வலிமை பொருந்தியது என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வாழ்நாள் கான்கிரீட்டில் கட்டப்பட்ட பாலங்களைப் போலவே அதிகம் எனவும் கூறுகிறார்கள். இந்தப் பாலம் 800 அடுக்குகளான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை உருவாக்கிய நெதர்லாந்த் பொறியாளர்கள் குழு செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்தப் பாலத்தை உருவாக்க மொத்தமாக 3 மாதம்தான் ஆனது. சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் ஆனது. உலகிலேயே இதுதான் முதல் 3-டி பிரின்டிங் பாலம். இதை வடிவமைத்ததில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி” என்றனர்.

Related Posts

error: Content is protected !!