தேசிய தகவல் மையத்தில் ஏகப்பட்டவேலைவாய்ப்பு!

தேசிய தகவல் மையத்தில் ஏகப்பட்டவேலைவாய்ப்பு!

மத்திய அரசின் இந்திய தேசிய தகவல் மையத்தில் நிரப்பப்பட உள்ள 495 சயின்டிஸ்ட், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் மார்ச் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NIELIT/NIC/2020/1

நிறுவனம்: இந்திய தேசிய தகவல் மையம் (National Informatics Centre)

மொத்த காலியிடங்கள்: 495

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientist-‘B’ Group ‘A’
காலியிடங்கள்: 288
சம்பளம்: மாதம் ரூ. 56100 – 1,77,500

பணி: Scientific/Technical Assistant – ‘A’ Group ‘B’
காலியிடங்கள்: 207
சம்பளம்: மாதம் ரூ. 35400 – 1,12,400

தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், கம்யூனிகேஷன், கணினி மற்றும் நெட்வொர்க்கிங் பாதுகாப்பு, கணினி பயன்பாடு, மென்பொருள் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, கணினி மேலாண்மை, சைபர் சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி., எம்.எஸ்., எம்சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.calicut.nielit.in/nic என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2020

error: Content is protected !!