தேசிய இந்து ஆலயங்கள் நாள்: காலத்தின் கட்டாயம்!

தேசிய இந்து ஆலயங்கள் நாள்: காலத்தின் கட்டாயம்!

சோம்நாத் கோயிலை குஜராத்தில் எப்படி கஜினி தகர்த்து போட்டானோ அதற்கு கொஞ்சமும் குறையாத அழிவுகள் மாலிக்காபூர் காலத்திலும் துக்ளக் காலத்திலும் தமிழகத்திலும் நடந்தது. பின்னாளில் வந்த நாயக்கர்கள் மதுரை, திருவரங்கம் என சீர்படுத்தியதால் அந்த அழிவு நமக்கு தெரியவில்லையே தவிர பாண்டியர் கால ஆலயம் இவை அல்ல‌. உண்மையில் இந்த சுல்தானிய படையெடுப்பால் மிகபெரிய பாதிப்புக்கு உள்ளான இடம் தஞ்சை பெரியகோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் , திருவண்ணாமலை கோயில் என நிரம்ப உண்டு. இன்று காணும் தஞ்சாவூர் கோயிலின் வடிவம் வேறு ராஜராஜசோழன் கட்டிய ஆலயத்தின் வடிவம் இது அல்ல, இன்று அந்த பெரிய கோபுரமும் பெருவுடையாரும் மட்டுமே எஞ்சியிருக்கின்றது, அதை ஒட்டிய சிறுமண்டபமும் எஞ்சியிருக்கின்றது.உண்மையில் அக்கோயில் அப்படி அல்ல என்கின்றது வரலாறு அதுவும் பிரமாண்டமாகத்தான் இருந்திருக்கின்றது, அந்த பெரிய கோபுரம் தங்கத்தால் மூடபட்டிருந்தது, பகலில் குறிப்பாக காலை மாலையில் அது கயிலாய வடிவமாக ஜொலித்திருக்கின்றது, பவுர்ணமி ஒளியில் இன்னும் இன்னும் விஷேஷம்.

மாலிக்காபூர் அதை கொள்ளையடித்திருக்கின்றான், இன்னும் பிரகாரஙளை எல்லாம் தகர்த்திருக்கின்றான், அவனால் பெருவுடையாரை மட்டும் தொடமுடியவில்லை அதை இன்னும் இன்னும் தொட்டால் மொத்த கோபுரமும் சிக்கலாகும் அப்போதும் தனக்கு ஒன்றும் கிடைக்காது என விட்டு சென்றிருக்கின்றான் இப்போது நாம் காணும் ஆலயம் நாயக்கர் வரும்போது இடிந்தே கிடந்தது, நாயக்கரும் மராட்டியரும் இடிபாடுகளை அகற்றி கல் பதித்து இன்று எஞ்சியிருக்கும் வெறும் கோபுரம் மட்டும்மே நமக்கு கிடைத்தது, அந்த பெரிய நந்தி நாயக்கர் வைத்தது.சிதம்பரம் ஆலயத்தில் சோழர் கால பொற்கூரையும் இந்த கொள்ளைக்கு தப்பவில்லை, தஞ்சாவூர் தவிர காவேரியின் வடபாகமெல்லாம் மீண்டும் பிஜப்பூர் சுல்தான் வசம் சிக்கியது, சிவாஜியால் கொலலபட்ட அப்சல்கான் இங்கு பெரும் அழிவினை செய்தான்.வீரசிவாஜிதான் வந்து இவற்றை எல்லாம் மீட்டான், சிதம்பரம் ஆலயம் அவனால் மீட்கபட்டு அவன் மகன் சாம்பாஜியால் இன்று காணும் பொற்கூரை வேயபட்டது, இன்றிருக்கும் பொற்கூரை மராட்டியர் தந்தது.

ஆக எங்கோ சோமநாதபுரி என கஜினியினை சாடும் தமிழக இந்துக்களுக்கு இந்த மண் கண்ட அழிவுகள் தெரியவில்லை, சோமநாத்புரி சந்தித்த அதே அழிவை திருவரங்கமும் மதுரையும் சந்தித்தது.ஆனால் திருவரங்க வாசலில் அய்யா ராம்சாமி அமர்ந்திருக்கின்றார் உள்ளே துலுக்க நாச்சியார் அமர்ந்திருக்கின்றார் , பெருமாள் லுங்கி கட்டி சப்பாத்தி சாப்பிடுகின்றார்.இந்த ஆகமவிதியெல்லாம் எங்கே போயிற்று என்பதுதான் இங்கு தெரியவில்லை, திருப்பரங்குன்றத்தில் கோயில் நிலத்தில் விளக்கேற்ற முடியாது ஆனால் திருவரங்க பெருமாள் லுங்கி கட்டி துலுக்க நாச்சியாரோடு அமர்ந்திருப்பார்.வடகலை தென்கலை என மோதும் கோஷ்டிகள் துலுக்கநாச்சியோரோடு லுங்கி கட்டிய பெருமாளை பற்றி, சப்பாத்தி சாப்பிடும்பெருமாள் பற்றி வாயே திறக்கா மர்மமும் புரியவில்லை.இவை எல்லாம் இந்துக்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று

மதுரை ஆலய நிலை இதைவிட மோசம் அங்கு நடந்த அழிவுகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இன்று திருப்பரங்குன்ற விவகாரம் இவ்வளவு மோசமாக மாறியிருக்காது.இந்திய அளவில் கோவில்கள் தினம் என ஒன்றை தேசிய அரசு அறிவிக்கலாம், வெறுமனே சோம்நாத்தில் ஒரு நாள் காசியில் ஒருநாள் மதுராவில் ஒரு நாள் என அழுவதில் அர்த்தமில்லை. தேசமெங்கும் கோயில்கள் நாள் என ஒன்று உருவாக்கபட்டு அந்நாளில் ஒவ்வொரு ஆலயமும் கடந்து வந்த அழிவுகள் அவை சந்தித்து நீண்ட நெருக்கடிகள் என எல்லாமும் இங்கு சொல்லப்பட வேண்டும், இந்துக்களை மானமும் அறிவும் உணர்வும் கொண்ட இனமாக மாற்ற அதுவுதான் வழி. 

இப்படி இந்தியா முழுக்க ஒவ்வொரு கோயிலும் அந்நியர் படையெடுப்பால் அழிந்த வரலாற்றை தாங்கி நிற்கின்றது , திருசெந்தூர் ஆலயம் கூட அந்த வடுவுக்கு தப்பவில்லை, டச்சுக்காரன் அதை குடோனாக வைத்த காலமும் உண்டு.இவை எல்லாம் தேசமெங்கும் ஒரே நாளில் நினைவு கூறும்படி தேசிய இந்து ஆலயங்களின் நாள் என ஒன்றை மத்திய அரசு அறிவித்து அந்தந்த ஆலய நினைவுகளை வரலாற்றை மக்களுக்கு கொடுத்தல் வேண்டும், அந்நாளில் அழ ஆரம்பித்தால் ஆண்டு முழுக்க அழலாம் அவ்வளவு வலிமிகுந்த வரலாறுகள் ஒவ்வொரு ஆலயத்தின் பின்னாலும் நிற்கின்றன‌.ஒவ்வொரு ஆலயமும் சுல்தான் கால படையெடுப்பில் அழிந்த ஆயிரமாயிரம் ஆன்மாக்களின் கதறலை கொண்டிருக்கின்றது, அவைகளை காதுகொடுத்து கேட்கத்தான் யாருமில்லை, வருடத்தில் ஒருநாளாவது அந்த ஆன்மாக்களின் குரலுக்கு செவிமடுத்து அவர்களோடு அழுவோம் , அப்போதுதான் எஞ்சியிருக்கும் ஆலயங்களை காக்கும் வைராக்கியமாவது உருவாகும்!

பிரம்மரிஷியார்

Related Posts

error: Content is protected !!