செவ்வாய் கிரகத்திலிருந்து மண் சேம்பிள் பூமிக்கு வரப் போகுது!

செவ்வாய் கிரகத்திலிருந்து மண் சேம்பிள் பூமிக்கு வரப் போகுது!

தமிழில் ஒரு சொலவடை உண்டு- ’பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று பொறுமைக்கு பூமியை உதாரணமாய் சொல்வதை பலரும் கேட்டிருக்கலாம். இதனை தவறாக புரிந்து கொண்ட மனிதன், சகிக்க முடியாத பலவற்றையும் செய்து பூமியை வாழத் தகுதியற்ற இடமாக்கி வருகிறான். தண்ணீருக்கான போர் வெடித்துக்கொண்டு இருக்கும். சொல்லப்போனால் பூமி வேகுவாக வாழ தகுதியற்ற இடமாக மாறிக்கிடக்கும். ஆனால் ஓன்று மட்டும் வளர்ந்து கிடக்கும் அதுதான் தொழில்நுட்பம். ஆம் மனிதன் தனக்கான வேறு ஒரு வசிப்பிடத்தை அடைந்தது இருப்பான்(இன்றே செவ்வாயின் குடியேறுவதற்கான ஆய்வுகள் விரைவாக நடந்துகொண்டிருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது) ஆம் Hollywood படங்களில் வருவது மாதிரி. வேறு கிரகத்தை அடைந்த மனிதன் மேலும் சிலகாலத்தில் Warm hole யை கண்டுபிடித்து இருக்கலாம், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தொழில் நுட்பத்தை அடைந்து இருக்கலாம் அப்படியென்றால் அப்போது கால பயணம் சாத்தியம் தானே? இன்னும் சொல்லப்போனால் இன்று எதுவெல்லாம் நம் கற்பனை கனவுகளோ அத்தனையும் சாத்தியமாகி இருக்கலாம். இதன் பொருட்டுதான் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் மற்றம் பாறைகளின் மாதிரியை, பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய, நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஈடுபட்டுள்ளன. ‘தவிர ‘ஸ்பேஸ்எக்ஸ்’ போன்ற தனியார் நிறுவனங்கள், 2022க்குள் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் வகையில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. செவ்வாய் , சூரியனில் இருந்து புதன், வௌளி, பூமி ஆகியவற்றுக்கு அடுத்து நான்காவது கோளாக உள்ளது. பூமியைப் போல, செவ்வாயும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான துாரம் மாறிக் கொண்டே இருக்கும். 2016 மே 22ல் 7.5 கோடி கி.மீ., ஆக இருந்தது. இது 2018 ஜூலை 27ல் 5.7 கோடி கி.மீ., ஆகவும் இருக்கும். தற்போதுள்ள விண்கலன்களின் அடிப்படையில் செவ்வாய்க்கு செல்ல தோராயமாக 180 நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான காரணிகள் உள்ளன.

பூமியும், செவ்வாயும் சில பண்புகளை ஒத்துள்ளன. இதன் காரணமாக செவ்வாயிலும் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகளும் இறங்கியுள்ளன. என்ன ஆய்வு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இணைந்து இந்த ஆராய்ச்சியை தொடங்குகிறது. இதன்படி செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் மற்றும் பாறைகளின் மாதிரியை விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டு வந்து, ஆராய்ச்சி செய்வதே இதன் நோக்கம்.

இதன் மூலம், வேற்று கிரகவாசிகளக்கு, அந்த மண் மற்றும் பாறைகள் எந்தளவுக்கு உதவும் என்பதை, விஞ்ஞானிகள் ஆராய உள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று விண்கலம் பூமியில் இருந்து அனுப்பப்பட உள்ளது. அதே போல, செவ்வாயிருந்து ஒரு விண்கலம் பூமிக்கு செலுத்தப்பட உள்ளது. செவ்வாயிலிருந்து விண்கலம் அனுப்பும் முயற்சி இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!