சென்னையின் சுறுசுறுப்புக்குக் காரணம் இட்லி, வடை! – ஐ ஐ டி விழாவில் மோடி பேச்சு! – வீடியோ!

சென்னையின் சுறுசுறுப்புக்குக் காரணம் இட்லி, வடை! – ஐ ஐ டி விழாவில் மோடி பேச்சு! – வீடியோ!

இந்திய அளவில் பிரபலமான ஐஐடி-சென்னையின் 56வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இந்தப் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில் மாணவர்கள் வேட்டி -சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை மற்றும் சுடிதார் அணிந்தும் வந்து பட்டங்களை பெற்றனர்.

இந்த விழாவில் மோடி பேசியபோது, “என்னைப் பொறுத்தவரை இங்கு கூடி இருப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு என் நன்றிகள். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. சிங்கப்பூரைப் போல் பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்தவேண்டும்.

இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. சாதித்த மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன். அவர்களின் தியாகம் உங்களை வளர்த்துள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது.

தொன்மையான மொழி தமிழ்

உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உங்கள் வெற்றியில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களை நாம் உற்சாகப் படுத்துவோம். ஒருவரின் வெற்றியில் பலரின் பங்களிப்பு உள்ளது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன்.உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். நீங்கள் ஒரு சிறந்த கல்வி சாலையில் வெளியேறி இருக்கிறீர்கள். உலகமே உற்றுநோக்கும் கல்விச்சாலை இது. இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் மீது உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது. உங்களுடைய ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.

உலகமே வியக்கிறது

இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் தான். உலக முழுவதும் இந்திய சமுதாயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.ஐ.டி. மாணவர்கள் நாட்டின் தூண்களாக திகழ்கிறார்கள். பொதுவான சவால்களை சந்திப்பதற்கு இந்தியாவும், சிங்கப்பூரும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்திய இளைய சமுதாயத்தின் தன்னம்பிக்கையை கண்டு உலக தலைவர்கள் வியக்கிறார்கள். இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புக்கள் உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். 21ம் நூற்றாண்டின் தேவையை புரிந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதிய கண்டுபிடிப்புகள்

இதுவரை 200 ஸ்டாட்அப் தொழில்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பசி, தூக்கம் பாராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ரோபோடிக் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் மாணவர் கள் கவனம் செலுத்த வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் சென்னை ஐ.ஐ.டி. முதன்மை இடம் பிடிக்கிறது. கடின உழைப்பால் முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் இந்திய மாணவர்களுக்கு உள்ளது. உங்களது கண்டுபிடிப்புகளின் மூலம் இன்று பல பிரச்னைக ளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக யார் கவனம் செலுத்துகிறார்கள் என்று கேமரா மூலம் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் தொடர்பான உங்கள் கண்டுபிடிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இனி என்ன நடக்கும் தெரியுமா? நாடாளுமன்றத்தில் இதனைப் பயன்படுத்துவது தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்களிடம் நான் பேசவுள்ளேன். ஏனென்றால் இந்த தொழில்நுட்பமானது நாடாளுமன்றத்துக்கு மிகவும் தேவைப்படுகிறது என்றார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது அதில் பங்கேற்பவர்கள் உண்மையில் கவனம் செலுத்துகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் செயலில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இட்லி, வடை

கடந்த 36 மணிநேரங்களுக்கும் மேலாக நீங்கள் அனைவரும் கடுமையாக பணியாற்றி பல சவாலான காரியங்களை செய்து முடித்து சாதனைகளைப் படைத்துள்ளீர்கள். உங்கள் அனைவரின் உற்சாகத்துக்கும், உத்வேகத்துக்கும் எனது பாராட்டுக்கள். இத்தனைக்கும் மத்தியில் யாரும் சோர்வடையாமல் உள்ளீர்கள். மிகப்பெரிய காரியத்தை செய்து முடித்த திருப்தி மட்டுமே இங்கு தெரிகிறது. இதற்கு சென்னையின் தனித்துவமிக்க சிறப்பான இட்லி, வடை, தோசை, சாம்பார் போன்ற சிற்றுண்டியும் தான் காரணம் என்று கருதுகிறேன். சென்னையின் கலாசாரமும், பாரம்பரி யமும், விருந்தோம்பலும் மிகச்சிறப்பானது. சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ள விருந்தினர் களும் சென்னையின் இந்த தனிச்சிறப்பை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்” என்றார்.

error: Content is protected !!