146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து விட்டு 172 மசோதாக்களை நிறைவேற்றியது மோடி அரசு!

146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து விட்டு 172 மசோதாக்களை நிறைவேற்றியது மோடி அரசு!

நாடாளுமன்றத்தில் 146 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 172 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இவற்றில் பாதி மசோதாக்கள் மீது ஜஸ்ட் 2 மணி நேரம் மட்டுமே விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற 17வது குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பாதிக்கும் மேற்பட்ட மசோதாக்கள் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற மசோதாக்களில் 16 சதவீத மசோதாக்கள் மட்டுமே நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘பிஆர்எஸ் லெஜிஸ்லேட்டிவ் ரிசர்ச்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தி வெளியிட்ட பதிவில், ‘நடந்து முடிந்த குளிர்கால கூட்டத் தொடரில் மட்டும் மொத்தம் 172 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், லோக்சபாவில் 86 மசோதாக்களும், ராஜ்யசபாவில் 103 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு மசோதாவின் மீதான விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட 16 மசோதாக்கள் மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்கள் மீதான விவாதத்தில் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். குளிர்கால கூட்டத்தொடரின் போது எந்த மசோதாக்களும் ஹவுஸ் கமிட்டிக்கு அனுப்பப்படவில்லை. அதேபோல் லோக்சபா துணை சபாநாயகரை இதுவரை தேர்வு செய்யவில்லை.

மக்களவையின் அலுவல்கள் தோராயமாக 74% ஆகவும், மாநிலங்களவையின் அலுவல்கள் தோராயமாக 79% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள் பின்வருமாறு:

1.வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023.
2.ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2023.
3.ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2023.
4.மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023
5.ரத்து மற்றும் திருத்த மசோதா, 2023
6.டெல்லி சட்டங்களின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா, 2023.
7.தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023
8.பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023.
9.தொலைத்தொடர்பு மசோதா, 2023

மேலும் லோக்சபா துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் லோக்சபா துறை சபாநாயகரை தேர்வு செய்யாமல் இருப்பது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. மேலும் எதிர்கட்சிகளை சேர்ந்த 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றியது குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!