மோடி சர்ச்சை : ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

மோடி சர்ச்சை : ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

டந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல், “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்தார்.இதை அடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனுடன், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுத்து விட்டது. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார்

error: Content is protected !!