சீனா தயாரித்த உலக உருண்டையில் காஷ்மீரைக் காணோம்!

சீனா தயாரித்த உலக உருண்டையில் காஷ்மீரைக் காணோம்!

கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் என்பவர் டொராண்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு ஒரு குளோப் உலக உருண்டையை வாங்கியுள்ளார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டதாகும். வீட்டுக்கு வந்தவர் தனது மகளிடம் அதனை கொடுத்துள்ளார். அவரது மகளும் அந்த உலக உருண்டையில் கனடா, இந்தியா எங்கு இருக்கிறது என்று தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது பார்த்தபோது இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் தனித்து காட்டப்படுள்ளதத கண்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் புகார் கொடுத்த சந்தீப் கூறுகையில், எனது மகளிடம் இந்தியாவின் ஒரு பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என்பதை நான் வலியுறுத்திக் கூறாமல் விட்டால், அவள் மனதில் இந்தியாவைப் பற்றிய வேறு புகைப்படம் தான் இருக்கும். இதனால், எதிர்கால சந்ததியினருக்கு இந்தியாவைப் பற்றி வேறு மாதிரியான எண்ணம்தான் இருக்கும், என்று கூறியுள்ளார். இதே போன்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட உலக உருண்டையில், ஜம்மு காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் இந்தியாவில் இருந்து பிரித்து கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சீனா வெளியிட்டுள்ள உலக உருண்டையில் காஷ்மீர் தனி நாடாகவும், அருணாச்சலப்பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாகவும் காட்டப்பட்டுள்ள தகவலை கனடாவில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு டுவிட்டர் மூலம் தெரிவித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

கனடாவில் வாழும் இந்தியர்கள் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர்களில் சீனாவின் அடுத்த கட்ட திமிர்த்தனமான செயலை அம்பலப்படுத்தி தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகின்றனர். அதில்,‘சீனா வெளியிட்டுள்ள உலக உருண்டையில் காஷ்மீர் தனி நாடாகவும், அருணாச்சலப்பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாகவும் காட்டப்பட்டுள்ளன’ என்ற தகவலை கவலையுடன் பகிர்ந்துள்ளனர்.

இந்த உலக உருண்டைகள் கனடாவை சேர்ந்த காஸ்ட் கோ ஸ்டோர்களில் கிடைக்கும் தகவலையும் தெரிவித்துள்ளனர். இந்த ‘காஸ்ட் கோ’ உலக அளவிலான மிகப்பெரிய சில்லறை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இந்த ஸ்டோர்கள் அதிக அளவில் உள்ளன. அமெரிக்காவில் உள்ள காஸ்ட் கோ ஸ்டோர்களிலும் இத்தகைய உலக உருண்டைகள் கிடைப்பதாகவும் கனடா வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். அந்த உலக உருண்டை படத்தையும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!