கவர்னரை நேரில் சந்தித்து முறையிட்ட கங்கனா!
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் கங்கனா மற்றும் சிவசேனை இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. இதனிடையே, மும்பையிலுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மும்பை மாநகராட்சி அவரது வீட்டின் ஒரு பகுதியை இடிக்க முற்பட்டது. இதையடுத்து, வீட்டின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில், தனது சகோதரியுடன் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை இன்று சந்தித்தார் கங்கனா.
இந்த சந்திப்புக்குப் பிறகு, அவர் தெரிவித்ததாவது:
“நான் ஆளுநரைச் சந்தித்தேன். ஒரு மகள் போல என் கருத்தைக் கேட்டார். நான் ஒரு குடிமகளாக அவரைச் சந்திக்க வந்துள்ளேன். அரசியல் செய்ய என்னிடம் எதுவுமில்லை. எனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து அவரிடம் தெரிவித்தேன். எனக்கு நிகழ்ந்தது முறையற்றது. அது அநாகரிகமான செயல்.”
இந்த பிரச்னைக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் கடந்த புதன்கிழமை அவர் மும்பை வந்தடைந்தார்.