நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை எலான் மஸ்க்-கிடம் இருந்து தட்டி தூக்கினார் ஜெஃப் பெசோஸ்!

நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை எலான் மஸ்க்-கிடம் இருந்து தட்டி தூக்கினார்  ஜெஃப் பெசோஸ்!

ர்வதேச அளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்து விட்டார். இதையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 197.70 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் எலான் மஸ்க் பின்தங்க, 200.30 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் ஜெஃப் பெசோஸ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளாராக்கும்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் ஆகிய இருவரது பங்குகளும் அண்மைக்காலமாக எதிரெதிர் திசையில் போக்கு காட்டி வருகின்றன. இது இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பின் வித்தியாசத்தை அதிகரிக்கவும் செய்து வந்தது. இரண்டும் அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தூண்டும் முன்னணி பங்குகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளன. எனினும், அமேசான் பங்குகள் 2022 பிற்பகுதியில் தொடங்கி, இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளன. மாறாக எலான் மஸ்கின் டெஸ்லா அதன் 2021 உச்சத்திலிருந்து பெருமளவுக்கு கீழே சரிந்தது.

எலான் மஸ்கை பொறுத்தளவில் அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் ஷாங்காய் தொழிற்சாலைகள், அதன் ஏற்றுமதி அளவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சரிவை கண்டு வருகின்றன. இதன் போக்கு அதிகரித்ததில் நேற்றைய தினம் டெஸ்லா பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இது எலான் மஸ்க் சொத்துக்களின் நிகர மதிப்பை பாதிக்க, உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து எலான் மஸ்க் சரிய நேர்ந்திருக்கிறார்.அதே சமயம் கொரோனா பெருந்தொற்று காலம் முதலே, அமேசானின் ஆன்லைன் விற்பனை ஏறுமுகம் கண்டிருக்கிறது. ஊரடங்கு மற்றும் வீடடங்கு காலம், வாடிக்கையாளர் மத்தியில் அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தை பரவலாக எடுத்துச் சென்றதில், ஜெஃப் பேசோஸ் தனக்கான புதிய சந்தையை தக்க வைத்துள்ளார். இதன் மூலம் 60 வயதாகும் பெசோஸ், 2021க்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்ததுள்ளார்

அந்த வகையில் நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) அமேசான் பங்குகளில் இருந்து பெறுகிறார். அதன்படி தற்போது எலான் மஸ்க் $197.7 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார்.அதேபோல ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியனாக உள்ளது. இதன்மூலம் 2021-க்குப் பிறகு ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் பெசோஸ் முதல்முறையாகத் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். ஒட்டு மொத்தமாக ஜெஃப் பெசோஸ் கடந்த 2017ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை முந்தி உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் முதலிடத்தில் சில காலம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!