செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதல்ல- ஐகோர்ட் தீர்ப்பு!

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதல்ல- ஐகோர்ட் தீர்ப்பு!

லாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல, ஆனாலும் இந்த விவகாரத்தில் முதல்வரே முடிவெடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னொரு சமயம் நடத்திய சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். . செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன. இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதே சமயம் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து கவர்னர் உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக , எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி.,ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். மேலும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணையானது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சராவாக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். ஆனாலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பதால் எந்த பலனும் இல்லை எனவும் கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் உள்ளிட்டோரின் வழக்குகளை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்.

error: Content is protected !!