ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா!

ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா!

ந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், 500க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு ஆன்மிக சுற்றுலாக்களை இந்திய ரயில்கள் மூலம் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், தற்போது புதிய முயற்சியாக ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையிலிருந்து 5 நாள் சுற்றுப் பயணமாக அக்.6-ஆம் தேதி புறப்பட்டு, புவனேஸ்வா், கோனாா்க், புரி ஜகந்நாதா் கோயில் மற்றும் சில்கா ஏரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று திரும்ப ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, நபா் ஒருவருக்கு ரூ.35,800-கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

இதுபோல, 6 நாள் சுற்றுப் பயணமாக அக்.13-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு, இலங்கையின் கொழும்பு, கண்டி, கதிா்காமம் மற்றும் நுவரேலியா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்ப கட்டணமாக ரூ.63,500-நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நவ.2-ஆம் தேதி புறப்பட்டு, 6 நாள் சுற்றுப் பயணமாக காஷ்மீா், ஸ்ரீநகா், குல்மாா்க், பஹல்கம், சோன்மாா்க், ஹெளஸ்போட் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மீண்டும் சென்னை திரும்ப கட்டணமாக ரூ.49,900-வசூலிக்கப்படுகிறது. இதில் விமானக் கட்டணம், உள்ளூா் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளா், பயணக்காப்பீடு, விசா, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை அடங்கும்.

சுற்றுலா செல்ல விரும்பும் நபா்கள் இதுகுறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள ஐ ஆர் சி டி சி இணையதள முகவரியான www.irctctourism.com மூலமாகவும் மற்றும் திருச்சி 82 27 93 20 70, மதுரை 82 87 93 19 77, சென்னை  8287931974, 8287931968, ,9003140682 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்

error: Content is protected !!