ஈரானில் ராணுவ தளபதி சோலெமானி இறுதி ஊர்வலத்தில் பலர் பலி!

ஈரானில் ராணுவ தளபதி சோலெமானி இறுதி ஊர்வலத்தில் பலர் பலி!

ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த காசிம் சோலெமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஈரானின் குத் படையின் தலைமை தளபதியான சோலெய்மணி பி்ராந்திய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தவர். ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்திற்காக ஈராக், சிரியா மற்றும் லெபனானில் ஈரான் ஆதரவு படைகளை நிலை நிறுத்த வியூகம் அமைத்தவர். அமெரிக்க படைகள் மீது அமெரிக்க ஆதரவு படைகள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலுக்கு சோலெமானி தான் காரணம் என கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்த போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் கூறுகிறார்கள்.

இதனிடையே நேற்று சோலெமானி உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டு வரப்பட்டது. ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

அதேபோல் பல லட்சம் பேர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 15 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியானதாவும், 48 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!