தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் இன்ஜீயஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ!

தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் இன்ஜீயஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ!

ர இருக்கும் தேர்தலில் IISB(இன்ஜீனியஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ) பெரியளவில் பங்கு வகிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள், வாழ்வியல் நெறியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் என இவர்களது குழுவில் சமூகத்தின் அடிதட்டு மக்களின் உணர்வுகள் வரையிலும், அவர்களின் தேவைகளையும் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் விதமாகவும், அதைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் இவர்கள் கடந்த தமிழக தேர்தலில் வகுத்த வியூகம் பெருவாரியான தொகுதிகளில் இவர்கள் களப்பணியாற்றிய வேட்பாளர்களை வெற்றியடைய செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தென்னகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளில் துணைத் தலைவராகவும், வடிவமைப்பு இயக்குநராகவும், தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த வி.எஸ்.செந்தில் குமார் இந்த நிறுவனத்தை துவக்கியிருக்கிறார்.

தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் பல வெற்றி விளம்பரங்களையும், பல முன்னணி நிறுவனங்களின் பிராண்ட்களை மக்களிடையே கொண்டு சேர்த்து, அதை வெற்றி பெற இவர் வகுத்த வியூகங்களும், பப்ளிசிட்டி யுக்திகளும் விளம்பர உலகில் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன. விளம்பர உலகில் இருந்து செய்தி துறையிலும் தடம் பதிக்க துவங்கிய இவர், அதன் பிறகு சாதித்ததெல்லாம் வரலாறு. . நல்ல விளம்பர யுக்தி என்பது, விளம்பரப்படுத்துதலை யோசிக்க வைக்காமலேயே மக்களிடையே சென்ற சேர்ப்பது என்பதை தன்னுடைய ஒவ்வொரு யுக்திகளிலும் மிகச் சிறப்பாக கையாண்ட இவர், கடந்த தமிழக தேர்தலில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு களமிறங்கி வகுத்த வியூகங்களால், இவர் களப்பணியாற்றிய 10 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர, பிற அனைத்து வேட்பாளர்களும் வெற்றி கனியைப் பறித்துள்ளனர்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனிப்பட்ட முறையில் இவர் களமிறங்கி வகுக்கிற வியூகங்கள் தேர்தல் வாக்கு பதிவு நேரத்தில் பெரும் வித்தியாசத்தைக் கொடுத்தது கண்கூடு. தற்போது, விளம்பரங்கள், தொலைக்காட்சியோடு நின்று விடாமல், மக்களை நேரிடையாக சென்றடையும் பல விளம்பர யுக்திகளையும், தேர்தல் முன்னெடுப்புகளை கடந்த 5 வருடங்களாக செய்து வருகிறார்.

இந்நிலையில், பல முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய திறமை வாய்ந்த இளைஞர்கள், சிந்தனையாளர்கள், முன்னணி விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய கிரியேட்டிவ் அதிகாரிகள் போன்றவர்களுடன் இணைந்து IISB – இன்ஜீயஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ என்ற நிறுவனத்தை தேர்தல் பிரச்சார வியூகங்கள், DATA Research, அரசியல் தலைவர்களுக்கு நற்பெயரை தொகுதி வாக்காளர்களிடையே பெற்று தரும் விளம்பர யுக்திகளுக்காகவும் பிரத்யேகமாக துவங்கியுள்ளார்.

தொகுதியின் கடைக்கோடி வாக்காளர்களையும் சென்றடையும் விதத்தில் தனது பிரச்சார யுக்திகளை சமூக வலைத்தளங்களில் துவங்கி, இன்றைய டிஜிட்டல் யுகத்திற்காக யுக்தியைப் பயன்படுத்துவது வரையில் இவரது வியூகம் பிரமிக்க வைக்கிறது. இவர்களுடைய குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சிந்தனையாளர்கள், ஸ்ட்ராடிஜிஸ்ட்கள், பொருளாதார நிபுணர்கள், என்.ஜி.ஓக்களில் பணியாற்றும் களப்பணியாளர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி, செய்திதாள்களில் பணியாற்றும் நிருபர்கள் என பல தனித்திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர்.

கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக ஒரு செய்தியாளராக, அரசியல் நோக்கராக பெங்களூருவில் வசித்த அனுபவம் இவருக்கு கர்நாடக அரசியலில் பெரும் அனுபவத்தைக் கொடுத்துள்ளதால், கர்நாடக தேர்தல் களத்தில் IISB பெரிய பரபரப்பைக் கிளப்பி வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபரங்களை https:///www.iisb.in தெரிந்துகொள்ளலாம்

error: Content is protected !!