‘இன்ஃபினிட்டி’ – விமர்சனம்!

‘இன்ஃபினிட்டி’ – விமர்சனம்!

ன்ஃபினிட்டி என்றால் முடிவில்லாதது அல்லது எல்லையற்றது என்று பொருள்.. அதற்காக கொஞ்சமும் அழுத்தமோ நேர்த்தியோ இல்லாத காட்சிகளும் அண்ணன் – தங்கை உறவை கொச்சைப் படுத்தும் கதைப்போக்கும் சகல கேரக்டர்களும் இஷ்டம் போல் பேசிக் கொண்டே இருப்பத்தையும் காணச் சகிக்கவில்லை. இத்தனைக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் கூட அக்கறைக் காட்டாததால் பெயில் மார்க் வாங்கி விடுகிறது இன்ஃபினிட்டி.

மாநகரில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார்.. அடுத்த ஒரே நாளில் பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இரண்டு கொலைகள் நடக்கிறது. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்படுகிறார். அதனால், அந்த வழக்கு சிபிஐ வசம் போகிறது. சிபிஐ அதிகாரி நட்டி நட்ராஜன் கொலை வழக்கை விசாரிக்க தொடங்கி எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். கூடவே இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன? , கொலையாளி யார்? என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை முடிவில்லா பிரச்சனையோடு சொல்வதே ‘இன்பினிட்டி’ படத்தின் கதை.

நாயகன் நட்டி வழக்கமான தனது பாணியில், வழக்கமான விறைப்போடு வருகிறார், போகிறார்..காட்சிக்குக் காட்சி தன்னை சிபிஐ அதிகாரி என்று நட்டி சொல்லும் போது தான் படம் பார்ப்பவர்களுக்கும் அட அமாயில்லே இவர் சிபிஐ என்று நினைவுக்கு வருவதுதான் காமெடி(?). ஆரம்பத்தில் சாஃப்ட் ஆக வந்து வில்லியாக மாறும் வித்யா பிரதீப் இன்னும் மிரட்டியிருக்கலாம். மற்ற கேரக்டர்களுக்கு படத்தில் பெரிய அளவில் வேலையில்லை. அதிலும் முனிஷ் காந்த் கடுபேற்றுகிறார்.

பட தொகுப்பு மிக மிக சாதாரணமாக உள்ளது.பாலசுப்பிரமணியன் G.யின் பின்னணி இசையும், சரவணன் ஸ்ரீ யின் ஒளிப்பதிவும் ஓரளவு கதைக்கு சப்போர்ட் செய்ய முயல்கிறது. கொலைக்கான காரணமும், அதன் பின்னால் இருக்கும் காட்சிகளும் கதைக்கு கொஞ்சம் கூட வலுசேர்க்கவில்லை. ஆனால்  . காவல் துறை என்பது  எப்படி இயங்குகிறது, சிபிஐ அதிகாரிகள் பணி பாணி என்ன? என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் ஏகப்பட்ட காட்சி கோர்வைகளுடன் அரைகுறையான இந்த ‘இன்ஃபினிட்டி’ படம் இரண்டாம் பாகத்துக்கான லீடை கொடுத்திருப்பதுதான் திகிலை கிளப்புகிறது.

மொத்தத்தில் இன்ஃபினிட்டி – வேஸ்ட்

மார்க் 2/5

error: Content is protected !!