பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு இரு மடங்கு சேவை வரி!-

பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு இரு மடங்கு சேவை வரி!-

பிரிட்டனில் தங்கியபடி பணியாற்றுகிற இந்திய மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை நிபுணர்களுக்கு இரண்டு மடங்கு வரி விதிக்கப்படுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக இமிகிரேஷன் சர்சார்ஜ் என்ற பெயரில் இந்திய மருத்துவர்கள் மற்றும் இந்திய சுகாதார பணியாளர்கள் மீது வரிவிதிப்பு முறை துவக்கப் பட்டது. அப்பொழுது ஆண்டுக்கு 200 பிரிட்டன் பவுண்டுகள் கட்டணமாக விதிக்கப்பட்டது. இப்போது அந்த கட்டணம் 400 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பணியாற்றும் தொழிலாளர்கள், கல்வி கற்க வந்த மாணவர்கள், அல்லது சுற்றுலா விசாவில் வந்துள்ள இந்தியக் குடும்பத்தினர் அனைவரும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என விதி செய்யப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சுகாதார பணியாளர்களுக்கு இந்த வரி விதிக்கப் படவில்லை. அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் சுகாதார தேவைகளுக்கு மேலும் இந்திய மருத்துவர்களை தேர்வு செய்யப் போவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்திய மருத்துவர்கள் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் பிரிட்டனுக்கு வந்து பணியாற்ற தயக்கம் காட்டக் கூடும். அதனால் பிரிட்டனின் சுகாதார சேவைப் பணிகள் பாதிக்கப் படலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் மருத்துவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்

Related Posts

error: Content is protected !!