ம.பி.யில் பாஜக முதல்வர் மோகன் யாதவின் அமைச்சரவையில், 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

ம.பி.யில் பாஜக முதல்வர் மோகன் யாதவின் அமைச்சரவையில், 28 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

த்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதுமான் சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், கைலாஷ் விஜய்வர்கியா, குவார் விஜய் ஷா, ராகேஷ் சிங், கரண் சிங் வர்மா, உதய் பிரதாப் சிங், விஸ்வாஸ் சாரங் உள்ளிட்ட 18 தலைவர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 6 பேர் இணை அமைச்சர்களாகவும் (தனிப்பொறுப்பு) 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

ம. பி.யில் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.தேர்தல் முடிவுகள் வெளியாகி, 20 நாள்கள் கடந்தும் அம்மாநிலத்தில் அமைச்சரவை பொறுப்பேற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அமைச்சரவையில் 28 பேர் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய கேபினட் அமைச்சர்களாக பிரத்யூமன் சிங் தோமர், துளசி சிலாவத், அடல் சிங் கசனா, நாராயண் சிங் குஷ்வாஹா, விஜய் ஷா, ராகேஷ் சிங், பிரகலாத் படேல், கைலாஷ் விஜயவர்கியா, கரண் சிங் வர்மா, சம்பதியா உய்கே, உதய் பிரதாப் சிங், நிர்மலா புரியா, விஸ்வாஸ் சாரங், கோவிந்த் சிங் ராஜ்புத், இந்தர் சிங் பர்மார், நகர் சிங் சவுகான், சைதன்யா காஷ்யப், ராகேஷ் சுக்லா ஆகிய 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர். ராதா சிங், பிரதிமா பாக்ரி, திலீப் அஹிர்வார், நரேந்திர சிவாஜி படேல் ஆகிய 4 பேர் இணை அமைச்சர்களாகவும், கிருஷ்ணா கவுர், தர்மேந்திர லோதி, திலீப் ஜெய்ஸ்வால், கௌதம் டெட்வால், லெகான் படேல், நாராயண் பவார் ஆகிய 6 பேர் (இன்டிபென்டன்ட் சார்ஜ்) அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “இன்று நல்லாட்சி தினம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள். மத்தியப் பிரதேச அரசின் கேபினட் அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் இன்று அமைக்கப்படும் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரை ம.பி முதல்வர் மோகன் யாதவ் நேற்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!