ஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் காண்கிறேன்!- ராம் மோகன் ராவ் சர்டிபிகேட்!

ஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் காண்கிறேன்!- ராம் மோகன் ராவ் சர்டிபிகேட்!

மக்கள் தொண்டு மகேசன் தொண்டென பல தலைவர்கள் தன்னலமின்றி பொதுச்சேவையாற்றிய வரலாறு கொண்ட அரசியல் தற்போது சாக்கடையாகி விட்டது என்று பலர் சொல்வதுண்டு. அதை நிரூபிக்கும் விதமாக நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் அரசியல் ஆலோசகராக ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ், இவருடைய வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள இவருடைய அறையிலும் கடந்த டிச., 21ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுமார் 30 லட்ச ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதே சமயம் தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு சில மாதங்களில் தமிழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் பதவியில் அமர்ந்து கேஷூவலாக ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி வந்தார்.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழ்கத்தில் 32 ஆண்டுகள் பல்வேறு பதவிகள் வகித்து ஓய்வும் ஆன பின்னர் சும்மா இருக்கப் பிடிக்காமல் ரஜினியுடன் இணைய தூது விட்டார். ஆனால் பதிலே சொல்லாத நிலையில் தற்போதும் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி வரும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராம மோகன ராவ் அளித்துள்ள பேட்டியில், ” பவன் கல்யாண் தனது கட்சியில் அரசியல் ஆலோசகராக சேருமாறு என்னை அழைத்தார்.அத்துடன் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வழிகாட்டுதல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஒரு அரசியல்வாதியின் இதயம் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் தன்மைகளை பவன் கல்யாணிடமும் பார்க்கிறேன். அவர் திரைப்பட ஸ்டாராக இருந்தபோதிலும் தற்போது தான் அரசியலுக்குள் நுழைகிறார். ஸ்டார் என்றில்லாமல் மக்களுடன் மக்களாக பழகும் தன்மை கொண்டவர். அதனால் ஜெயலலிதாவுடன் எப்படி அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தேனோ அப்படி கடைசிவரை பவனுடன் இருந்து அவரது ஆலோசகராக இருக்கவிரும்புகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!