சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்து சுட்டிக் காட்டி வந்த இந்திய ஜோடிக்கு நேர்ந்த கதி!

சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்து சுட்டிக் காட்டி வந்த இந்திய ஜோடிக்கு நேர்ந்த கதி!

பாம்பாட்டி அல்லது பாம்பு பிடிப்பவர் பாம்பால்தான் சாவார் என்றும் கத்தியை எடுத்தவன் கத்தி யால்தான்  சாவான் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அதே பாணியில்  சர்வதேச அளவில்  அரிய சுற்றுலா இடங்களை கண்டுக் களித்து அது குறித்து வலைப்பூ மூலம் சகலருக்கும் தெரிவித்த வந்த இந்திய தம்பதி ஒரு சுற்றுலா தலத்தில் மாண்டு போனது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் பொறியியல் கல்லூரியில் பி.டெக். பயின்று கடந்த 2010-ம் ஆண்டில் பட்டம் பெற்ற விஷ்ணு விஸ்வநாத், தன்னுடன் அதே கல்லூரி யில் பயின்ற மீனாட்சி மூர்த்தி என்னும் இளம்பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இருவருமே சாப்ட்வேர் என்ஜினீயர்கள் என்பதால் அமெரிக்காவில் சுலபமாக வேலைகிடைத்தது.

நியூயார்க் மாநிலத்துக்கு உட்பட்ட சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினீயராக பணியாற்றிய விஷ்ணு விஸ்வநாதனும் அவரது மனைவியும் பிரபல சுற்றுலாத் தலங்களை கண்டு களிப்பதில் ஆர்வம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

இதுபோன்ற ஆர்வம் கொண்ட மேலும் பலருக்கு அழகிய சுற்றுலாத்தலங்களை அறிமுகம் செய்து வைக்கும் நோக்கத்தில் (Holidays and Happily Ever Afters) என்னும் வலைப்பூ தளம் (பிளாக்) ஒன்றை இணையதளத்தில் நடத்தி வந்துள்ளனர். தாங்கள் ஜோடிப்பறவைகளாக சுற்றித்திரிந்த இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் அந்த இடங்களைப் பற்றிய அரிய தகவல்களையும் அந்த வலைப்பூ தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் யோசேமைட் தேசிய பூங்காவை சுற்றிப்பார்க்க சமீபத்தில் சென்ற இந்த தம்பதியரின் பிரேதங்கள் அங்குள்ள சுமார் 800 அடி பள்ளத்தாக்கில் நேற்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அசம்பாவிதம் எப்படி நேர்ந்தது? என்று விசாரித்து வருவதாக அந்த பூங்காவின் செய்தி தொடர்பாளர் ஜேனி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். வழிக்கலான மலைப்பகுதியில் அமைந்துள்ள இதே பூங்காவை சுற்றிப் பார்க்க வந்த பத்துபேர் இந்த ஆண்டில் தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது. அவர்களில் ஒருவர் கடந்த மே மாதம் இங்கு இந்தியாவை சேர்ந்த ஆஷிஷ் பெனுகோன்டா(29) என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், விஷ்ணு விஸ்வநாத்(29) மற்றும் மீனாட்சி மூர்த்தி(30) தம்பதியர் தற்போது 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!