‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியது..

நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3வது திரைப்படம் இது. இசையமைப்பாளர் பிஜே அவர்களுக்கு என் நன்றிகள். பல வருடங்களாக திரையில் இருக்கும் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைய வேண்டும். எனக்கு இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் வாய்ப்புத் தந்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி

பாடலாசிரியர் ஶ்ரீவித்யா பேசியது…

தமிழ்த் திரையுலகில் இப்படம் மூலம் நான் அறிமுகமாகிறேன். நான் கல்லூரிப் பேராசிரியர். பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் என் நண்பர் அவர் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்திக்கான வரிகள் நான் எழுதியுள்ளேன். தமிழில் எழுதவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. பெண்களை அவர்களின் உடலை வெளிகாட்டுவதை, நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் இன்றைய உலகம் அதை விரும்புகிறது. இப்படத்திற்காக படக்குழுவினர்கள் நன்றாக உழைத்து, விஷுவல்களை உருவாக்கியுள்ளனர். இளமை துள்ளல் படம் முழுக்க தெரிகிறது. படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

இசையமைப்பாளர் பிஜே பேசியது..

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் அதனால் மன்னிக்கவும். தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வயநாடு ஏரியாவைச் சேர்ந்தவன் அங்கு ரஜினி கமல் படங்கள் தான் அதிகம் ஓடும். இந்தப்படத்தின் வாய்ப்பு எதிர்பாராததது. எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவர்களால் தான் இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டேன் தமிழக ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

கொலப்பள்ளி லீலா பேசியது…

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். இந்தப்படத்தின் வாய்ப்பிறக்காக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இயக்குநரை எனக்கு நன்கு தெரியும். கடுமையான உழைப்பாளி, அவருக்கு எல்லோரும் நல்ல வாய்ப்புகள் தர வேண்டும். அவர் பெரிய வெற்றிகள் கிடைக்க வேண்டும். இபடத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஆதர்ஷ் பேசியது…

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டுமே தெரியும். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் நன்றிகள். நான் புதுமுகம். உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.

நடிகை அம்பிகா மோகன் பேசியதாவது..

என் சுவாசமே படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளேன். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றி. ஒரு குடும்பமாக இருந்து, அனைவரும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சாப்ளின் பாலு பேசியது..

ஒரு சின்ன கேரக்டர் தான் நடிக்கப் போனேன், எனக்குப் பெரிய கேரக்டர் தந்து, படம் முழுக்க வரவைத்து விட்டார் இயக்குநர். கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார், அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் விஜய் விஷ்வா பேசியது…

என் சுவாசமே இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் முன்னமே பார்த்தேன். மொபைலின் பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் கூப்பிட்டு பாராட்டியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளப் பேச்சு கேட்க அவ்வளவு அழகாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சின்னப்படங்கள் வியாபரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர், R மணி பிரசாத் பேசியது..

இங்கு எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகள். மலையாளப்படங்களை இங்கு கொண்டாடுவது போல தமிழ்படங்களை கேரளத்தில் கொண்டாடுவார்கள். கேரளாவில் தமிழ்படங்களுக்கு பெரிய பிஸினஸ் இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு குறைவான நேரமே இருந்தது. அதனால் தான் மலையாளக் கலைஞர்கள் நிறைய பணியாற்றியுள்ளனர். எனக்காக எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.

இணை தயாரிப்பாளர் ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியது..

SVKA Movies சார்பில் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். சஞ்சய் அண்ணா எனக்கும் இயக்குநராக வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்படத்திற்கு அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. என்னை இணைத் தயாரிப்பாளராகவும் ஆக்கி, அழகு பார்க்கும் சஞ்சய் அண்ணாவிற்கு நன்றி. இயக்குநர் மணி பிரசாத் பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஷீட்டிங்கின் போது அவரது தம்பி இறந்து விட்டார், ஆனாலும் அவர் மறு நாள் ஷீட்டிங் வந்தார். சினிமா மீது அவ்வளவு அர்ப்பணிப்பு கொண்டவர். இந்தப்படத்திற்காக மொத்தக் குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். SVKA Movies சார்பில் தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் இணை தயாரிப்பாளர் ரமேஷ் வெள்ளைதுரை வரவேற்று பொன்னாடை போற்றி வரவேற்றார்.

error: Content is protected !!