இலங்கையில் ஹெவி ரெயின் :

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மொத்தம் உள்ள 25-ல் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 47,922 குடும்பங்கள் அல்லது 2 லட்சத்து 7 ஆயிரத்து 556 பேர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.இதில் 1.34 லட்சம் பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 68 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் கொழும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கி உள்ளன.
மழை காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்த்தேக்கங்களிலிருந்து வெள்ள நீர் திறக்கப்பட்டதால் களினியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கிய பல்லாயிரகணக்கான மக்களை மீட்கும் பணியில் இலங்கை அரசு ஈடுப்பட்டுள்ளது.விமானப்படை, கடற்படை மற்றும் தரைப்படை வீரர்கள் வெள்ள மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

error: Content is protected !!