உலக செவிலியர் தினம்!

உலக செவிலியர் தினம்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. இன்னும் சொல்லப் போனால் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல… தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவச் சேவைகள் வரை சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத்தன்மையும் கொண்டு ஆற்றும் மகத்தான சேவை. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூறவே இந்நாள் தேர்ந்தெடுக்கப் பட்டது.

அதிலும் ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளையொட்டியே இந்த உலக செவிலியர் தினம் கொண்டாடப் படுகிறது.1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் கிரைமிய போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு இரவு நேரத்தில்கூட கையில் விளக்குடன் சென்று ஓய்வின்றி மருந்துவ உதவிகள் செய்தவர். இதனாலேயே கைவிளக்கேந்திய காரிகை என்று நைட்டிங்கேல் அழைக்கப்படுகிறார். செவிலிகளுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலில் துவங்கினார். பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம், அனைத்துத் செவிலிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் நைட்டிங்கேல்

ஆம்.. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டு. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதிலும் இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

அடுத்த முறை நீங்கள் ஒரு செவிலியரை சந்தித்தால் அவருக்கு நன்றி சொல்லுங்கள். அதற்கும் மேலாக அவரைப் போன்றவர்களை உருவாக்க தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வலுவான அடித்தளம் அமைத்துத்தந்த அந்த விளக்கேந்திய நங்கை புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு நன்றி கூறுவோமா?

Related Posts

error: Content is protected !!