ஓடும் பஸ்ஸில் உடற்பயிற்சிக் கூடம்!

ஓடும் பஸ்ஸில் உடற்பயிற்சிக் கூடம்!

தற்போதைய உலகில் பலரும் தங்களின் விருப்பப்படி உணவுகளை சாப்பிட்டு விட்டு உடல் எடையை பராமரிக்காமல் விட்டுவிடு கிறார்கள். ஆரோக்கியத்திற்கு கேடு என்று மருத்துவர்களை நாடும் போது அவர்களோ முதலில் உங்களின் உடல் எடையை குறைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சி எடுங்கள் என்று அறிவுரை கூறிவிடுகிறார்கள். உடனே தன் நண்பர்களின் வட் டாரத்திலோ அல்லது இணையத்திலோ சென்று உடனடியாக உடல் எடையை குறைக்கும் சில வழி முறை களைப் பற்றி தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

gym sep 23

அவர்களுக்கு பேலியே டயட், ஹெர்பல் டயட், கிரீன் டீ டயட், க்ராஷ் டயட் என சில உணவு முறைகள் குறித்து அறிந்து கொள்கிறார்கள். இதனிடையே ‘உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை’ என்று டிமிக்கி கொடுப்பவர்களுக்காகவே, உடற்பயிற்சி பேருந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த பேருந்தில் ஏறினால்… உடற்பயிற்சி செய்தபடியே பயணம் செய்யலாமாம். இதில் சாதாரண சீட்டில் அமர்வதற்கு பதிலாக… டிரட் மில் சீட்டில் அமரவேண்டுமாம். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என… நீண்ட தூர பயணிகளுக்காகவே இந்த பேருந்தை உருவாக்கி இருக்கிறார், ஜேம்ஸ் பால்போர்.

அதுபற்றி அவர் கூறுவதை கேளுங்களேன்.

“வெகுதூரம் செல்லவேண்டி இருப்பவர்கள், கட்டாயம் உடற்பயிற்சியை தள்ளி வைத்துவிடுவார்கள். வெகுதூர பயணமாக இருந்தால் நிச்சயம் அரை மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது பயணத்தை சுவாரசியமாக்குகிறது. எங்களிடம் பதிவு செய்துகொள்வதற்காக 8,121 பேர் காத்திருக்கிறார்கள். இந்த உடற்பயிற்சி பேருந்தில் சீட் பெல்ட், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு விஷயங்களைக் கொண்டு வர இருக்கிறோம். 45 நிமிடப் பயணத்துக்கு ஒருவர் ரூபாய் 1,100 முதல் 1,400 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்” என்கிறார் உரிமையாளர் ஜேம்ஸ் பால்போர்.

error: Content is protected !!