கார்டியன் – விமர்சனம்!

கார்டியன் – விமர்சனம்!

சினிமாக்களில் திகில் வகையை சார்ந்த பேய் படங்களை பார்க்க எப்போதும் அதிகப்படியான மக்கள் விரும்புவார்கள். என்னதான் உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும் திகில் படங்களை பார்ப்பதில் ஏனோ ஒரு அலாதி பிரியம்…! இந்த திகில் படங்களை பார்ப்பதில் எண்ணற்ற ஆரோக்கியங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. அதாவது திகில் படங்களை பார்ப்பதால் மூளையானது நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்ட்ஸை (neurotransmitters) வெளியிட்டு, மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. அத்துடன் dopamine, serotonin, glutamate போன்ற ஹார்மோன்களை தூண்டி மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதே போல, எந்த ஒரு பிரச்சினையையும் எதிர் கொள்ளும் அளவிற்கு மனதில் அதிக தைரியத்தை உண்டாக்குகிறதாம்.மேலும் திகில் படம் பார்பவர்களுக்கு ரத்த ஓட்டம் உடலில் சீராகி, வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலுவடைகிறதாம். லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவை டெஸ்ட் செய்யும் நோக்கமோ என்னமோ குருசரவணன் மற்றும் சபரி இவர்களின் டைரக்‌ஷனில் ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக் வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா(அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா(அறிமுகம்) உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பேய் படமே கார்டியன்.

கதை என்னவென்றால் தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சின்ன வயதில் இருந்தே எல்லோரும் சொல்லிச் சொல்லி வெறுப்புக் கலந்த அதிருப்தியுடன் வளர்ந்தவர் ஹன்சிகா. படித்து கட்டிடக்கலை டிசைனர் ஆகிறார். அதற்கான வேலையும் கிடைக்கிறது . ஒரு சூழலில் கல் ஒன்றின் மீது, ஹன்சிகாவின் இரத்தம் விழுந்து, அது கொஞ்சம் உயிர் பெறுகிறது. அந்த கல் மூலமாக, ஹன்சிகாவிற்கு தொடர்ந்து நல்லதே நடந்து வருகிறது. கிடைக்காத வேலை கிடைக்கிறது. வேலையில் தொல்லை கொடுக்கும் ஓனர் இறக்கிறார் என தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் அவர் என்ன நினைக்கிறாரோ அது அப்படியே நடக்கிறது. ஒரு சிலரை, ‘நீ இறந்து விடுவாய்’ என்று கூறுகிறார் அவர்கள் இறந்து விடுகிறார்கள். உடனே இதைக் கண்டறிய முயலும் மாந்திரீகர்கள் பூஜை செய்து அவர் உடலில் பேய் புகுந்திருப்பதை கண்டு அதை அடக்க முயல்கிறார்கள். அந்த பேய் யார்? ஹன்சிகா உடலில் அது செல்ல காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு கார்டியன் பதில் அளிக்கிறது.

பல காலம் கழித்து கண்ணில் படும் நாயகி ஹன்சிகா பல காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், பல காட்சிகளில் ஓவர் ஆக்ட்டிங் செய்து இர்ரிடேட் பண்ணுவதில் ஆர்வம் காட்டுகிறார்.. நாலு வில்லன்கள் இருந்தாலும் சுரேஷ் மேனன் சூப்பர் டெரர் காட்றாரு. மொட்டை ராஜேந்திரன், தங்க துரை காமெடி கொஞ்சம் கூட எடுபடவில்லை.

மியூசிக் டைரக்டர் சாம் சி எஸ் , கேமராமேன் கே ஏ சக்தி வேல் ஆகிய இருவர் பெயரும் டைட்டில் கார்ட்டில் மட்டுமெ தென்படுகிறது.

மொத்தத்தில் – இது இன்னொரு திகிலூட்டாத பேய் படம்

மார்க் – 2.25/5

error: Content is protected !!