சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு – அமைச்சர் நிதின் கட்காரி தகவல்!

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு – அமைச்சர் நிதின் கட்காரி தகவல்!

நாடெங்குமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதில் கடிதத்தை திமுக எம்பி பி.வில்சன் தனது சமூகவலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது பதில் கடிதத்தில், ‘சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித் திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 60 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க முடிவு செய்துள்ளோம்.

பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். என்று அந்த கடிதத்தில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!