இந்தியாவில் கூகுள் பிக்சல் 8 & பிக்சல் 8 புரோ அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் குறித்த முழு விபரம்

இந்தியாவில் கூகுள் பிக்சல் 8 & பிக்சல் 8 புரோ அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் குறித்த முழு விபரம்

போன் தான் ஸ்மார்ட்போன்களின் ராஜா என்ற நிலை பல்வேறு நாடுகளில் மாற துவங்கி விட்டது, இதற்கு முக்கியமான காரணம் இந்த ஐபோன்களில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவிலான மாற்றங்களும், புதுமைகளும் இல்லாதது தான். மக்களை வியக்க வைக்கும் வகையில் எவ்விதமான புதமைகளும் இல்லாத போதிலும் ஐபோன்களின் விலை தொடர்ந்து உயர்வாகவும், ப்ரோ மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதில் கடுப்பான மக்கள் மாற்று தேர்வுகளை தேட துவங்கிய வேளையில் சாம்சாங், கூகுள் பிக்சல், ஹூவாய் போன்கள் முக்கிய தேர்வாக உள்ளது. ஏற்கனவே மக்கள் ஆப்பிள் பொருட்களை கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கியுள்ள வேளையில் சமீபத்தில் வெளியான ஐபோன்களில் கூட கவரும் வகையில் எவ்விதமான புதுமைகளும் இல்லை. இந்த நிலையில் தான் ஆப்பிள் சிஇஓ டிம் குக் அதிர்ச்சி அடையும் வகையிலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குத்தாட்டம் போடும் வகையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானில் ஆப்பிள் ஐபோன் சந்தையை கூகுள் பிக்சல் காலி செய்து வருகிறது, இநிலையில் இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கூகுள் நிறுவனத்தின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஃப்ளிப்கார்ட்டில் பிக்சல் போன்களுக்கான முன்பதிவு இன்று -அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கி விட்டது. எனவே பிக்சல் 8 சீரிஸ் மொபைல்களை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூகுள் ஃப்ளாக்‌ஷிப் சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா இந்த 5ஜி போன்களில் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் கூகுள் பிக்சல் போன்களின் பழைய டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது. கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 புரோ போன்களின் அடுத்த வரிசை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 8 – சிறப்பு அம்சங்கள்

• 6.2 இன்ச் OLED டிஸ்பிளே
• டென்சர் ஜி3 சிப்செட்
•50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
• 10.5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
• 4,575mAh பேட்டரி
• 27 வாட்ஸ் அதிவேக ஒயர்டு சார்ஜிங் சப்போர்ட்
• இந்த போனின் விலை ரூ.75,999

பிக்சல் 8 புரோ – சிறப்பு அம்சங்கள்

• 6.7 இன்ச் QHD+ OLED டிஸ்பிளே
• 5,050mAh பேட்டரி
• 30 வாட்ஸ் அதிவேக ஒயர்டு சார்ஜிங் சப்போர்ட்
• இந்த போனின் விலை ரூ.1,06,999
• இயங்குதள அப்டேட் உட்பட 7 ஆண்டுகளுக்கான மென்பொருள் அப்டேட்டை இந்த போன்கள் கொண்டுள்ளன.

error: Content is protected !!