காப்பிரைட் சிக்கலில் சிக்கும் கூகுள், ஃபேஸ்புக்!

காப்பிரைட் சிக்கலில் சிக்கும் கூகுள், ஃபேஸ்புக்!

இளையராஜா தன்னோட பாடலுக்கு காப்பிரைட் கேட்டதால் பல பிக் மியூசிக் டைரக்டர்கள் அவரோட பாடலை பாடி பணம் சம்பாதிக்க முடியாம போச்சுங்கறது தெரிஞ்ச விஷயம். இதுக் கிடையிலே இப்போ பெரும் பாலானோர் யூஸ் பண்ற கூகுள், ஃபேஸ்புக் மாதிரியான ஆன்லைன் தளங்களில் அந்நிறுவனங்களால் உருவாக்கப்படாத படைப்புகள் எக்கச்சக்கம். உதாரணமாக, பாடல்கள், காணொளிகள், செய்திகள், கட்டுரைகள் இன்ன பிற எல்லாம் கூகுள் மற்றும் ஃபேஸ் புக்கில் வெளியானாலும் அப்படைப்புகளை கூகுள் நிறுவனத்தின் சொந்த படைப்பில்லை.

உலகின் முக்கிய கண்ட்ரியான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காப்புரிமை விதிகளின்படி, கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெளியாகும் படைப்புகளை உண்மையாகவே உருவாக்கியவருக்கு அந்நிறுவனங்கள் உரிய தொகையை வழங்க வேண்டும். இதன் விளைவாக, பாடல்கள், காணொளி கள், செய்திக் கட்டுரைகள் போன்றவற்றை உருவாக்குவோர் இனி பணம் கேட்டு கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களிடம் உரிமை கோரலாம்.

கலைஞர்களும், இசையமைப்பாளர்களும் இந்நிறுவனங்களுக்கு அனுமதி/உரிமம் வழங்க மறுத்தால், அவர்களது படைப்புகளை ஆன்லைன் நிறுவனங்கள் நீக்கிவிட வேண்டும்.

அதே மாதிரி செய்திகள், செய்திக் கட்டுரைகளை வெளியிடுவோரிடம் உரிமம் குறித்து ஆன்லைன் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு செய்தியை வெளியிட்டவர் அச்செய்திக்கான உரிமத்தை வழங்காவிட்டால் அந்த செய்தியை கூகுள் போன்ற நிறுவனங்கள் தலைப்புச் செய்தி களின் பட்டியலில் பயன்படுத்தமுடியாது.

இந்த புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் சங்கத்தின் பொது இயக்குநரான வெரோனிக் டெஸ்ரோஸஸ் வெளியிட்டுள்ள ஸ்டேட்மெண்டில், “கலைத் துறையின் மதிப்பை உறிஞ்சிக்கொண்டிருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள் கலைஞர் களுக்கு உரிய பணத்தை வழங்குவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளால் படைப்பாளிகளுக்கு நியாயமான பண உதவி கிடைக்கும்” என்று தெரிவிச்சிருக்கார்.

இதை அடுத்து மேற்கண்ட கூகுள், பேஸ்புக்கு சிக்கல் என்று சொல்லப்படுகிறது!

error: Content is protected !!