32°C

மீண்டும் நாடு தழுவிய போராட்டம்: CJP அமைப்பு எச்சரிக்கை!

admin Published: July 29, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 36 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினர், மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து தற்காலிகமாகப் போராட்டத்தைக் வாபஸ் பெற்றனர். இந்நிலையில், ஜூலை 25 அன்று மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வமற்ற வாக்குறுதிகளையும் உடன்பாடுகளையும் காப்பாற்றத் தவறினால், மீண்டும் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய அமைதிப் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று CJP அமைப்பு தற்போது எச்சரித்துள்ளது.

குறிப்பாக, ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய வன்முறைத் தாக்குதல் மற்றும் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவும் உருவான சர்ச்சையும்

மாணவர் போராட்டங்கள் தொடர்பான பொதுநல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, சமீபத்தில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், குற்றப்பின்னணி இல்லாத மாணவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியிருந்தாலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதற்கட்ட தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் விசாரணைகளைத் தொடர்ந்து நடத்த மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்தது

இந்த உத்தரவுதான் தற்போதைய புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மத்திய அரசுடன் ஜூலை 25 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, “மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்; எந்தவொரு போராட்டக்காரர் மீதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படாது” என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்கள் மீதான வழக்கைத் தொடரவும், அவர்களைத் துன்புறுத்தவும் முற்படுவதாக CJP குற்றஞ்சாட்டியுள்ளது.

‘எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் வேண்டும்’: CJP அமைப்பின் அதிரடி கோரிக்கைகள்

CJP அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிறுவன தலைவர் அபிஜீத் திப்கே ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெறுதல்: மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து FIR-களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இனி புதிய வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது என்பதற்கு அரசு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும்.

  • காவல்துறை அத்துமீறல் மீதான நாடாளுமன்ற விவாதம்: ஜூலை 20 அன்று நடைபெற்ற பேரணியில் மாணவர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உட்பட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்; இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

  • மாணவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி: பல மாநிலங்களில் காவல்துறையினர் மாணவர்களைத் தொடர்ந்து தேடிச் சென்று அச்சுறுத்தி வருவதை உடனடியாக நிறுத்தாவிட்டால், நாடு தழுவிய அளவில் மீண்டும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்.

அரசுக்குக் கொடுக்கப்பட்ட கெடு: அடுத்து என்ன?

மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மற்றும் சிபிஐ விசாரணை அறிவிக்கப்பட்டது ஆகியவற்றால் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டாலும், மாணவர்களின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாக CJP கருதுகிறது. அரசு தனது வாக்குறுதிகளை முழுமையாகச் செயல்படுத்தத் தவறினால், இம்முறை ‘முழுமையான தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல்’ கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஆயுதமாகப் பயன்படுத்தி மாணவர்களை அச்சுறுத்த முனையும் போக்கு தொடர்ந்தால், இந்திய அளவில் மீண்டும் ஒரு மாபெரும் மாணவர் புரட்சி வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.