பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டி!

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டி!

கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு இடையே பாகிஸ்தான் நாடு தவித்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் – இ- இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சவீரா பர்காஷ் என்ற இந்துப் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார்.

பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதால், பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷின் தந்தை, ஓம் பிரகாஷ், ஓய்வு பெற்ற மருத்துவர். அவர் கடந்த 35 ஆண்டுகளாக கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில், 2022 இல் அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிரகாஷ், PPP என்ற பாகிஸ்தான் பீபுள் பார்டி என்ற கட்சியின் மகளிர் பிரிவில் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் டிசம்பர் 23 (வெளக்கிழமை) அன்று வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறினார்.அவர் வசித்து வரும் பகுதியில், தன் தந்தை போல் ஏழைகளுக்காகப் வேலைசெய்ய விரும்புவதாக பேட்டியளித்துள்ளார்.குறிப்பாக, அவர் பெண்களின் நல்வாழ்வு, பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் அவரைப் பொறுத்தவரை, பெண்கள் தொடர்ந்து குறிப்பாக வளர்ச்சியின் துறையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு எதிராக போராடுவதாக கூறுகிறார்.

error: Content is protected !!