எலான் மஸ்க் தொடங்கும் புது யூ டியூப் சேனல்!

எலான் மஸ்க் தொடங்கும் புது யூ டியூப் சேனல்!

கூகுள் நிறுவனத்தின் யூடியூப்பிற்கு போட்டியாக நீண்ட வடிவிலான வீடியோக்களை பயனர்கள் தங்களது ஸ்மார்ட் டிவிகளை பார்க்கக் கூடிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். இதற்காக அமேசான் மற்றும் சாம்சங் டிவிகளுக்கான தனி செயலியை தயாரித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பயனர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், நீண்ட வடிவிலான வீடியோக்களை டிவி திரையில் காணும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பதிவிட்டு உள்ள செய்தி பல தரப்பிலும் பேசு பொருளாகி உள்ளது.

சர்வதேச அளவில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வருகிறது. அதே சமயம் ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கிய நாளில் இருந்தே வீடியோ கண்டென்ட்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, முதலில் ஷாட் வீடியோ, அதன் பின்பு வெர்டிக்கல் ஷாட் வீடியோ, கடைசியாக நீண்ட நேரம் கொண்ட வீடியோ-க்களுக்கான சேவை கொண்டு வரப்பட்டது. அண்மையில் கூட கூடப் பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட், டிவிட்டர் தனது முதல் நீண்ட நேர வீடியோவை பதிவிட்டார். இதில் போதுமான வருமானம் கிடைப்பதாகவும் உறுதியான நிலையில் அதிகப்படியான யூடியூபர்கள் தற்போது long format வீடியோவை பகிரத் தொடங்கியுள்ளனர்.

அதே சமயம் ட்விட்டருக்குள் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் லாங்க் பார்மேட் வீடியோ இரண்டையும் கொண்டு வர வேண்டும் என்பது எலான் மஸ்க் திட்டம், இதைப் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் டிவிட்டரில் தற்போது ஒவ்வொருவரும் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது. இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல நீண்ட நேர வீடியோக்களைப் பெரிய திரையில் பார்க்க மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொலைக்காட்சிக்கான X செயலி கொண்டு வரப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான யூடியூபின் சந்தையை பாதிக்கக்கூடும்.

எக்ஸ் தளத்தின் இந்தப் புதிய செயலி, யூடியூப் உடன் நேரடியாகப் போட்டியிடவே என்றும் கூறப்படுகிறது. புதிய ஆப், யூடியூபின் டிவியை போன்றே இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த வசதிக்காக, மாகாணங்கள் தோறும் வங்கிகள் வாயிலாக எக்ஸ் தளத்துக்கான அனுமதி பெறும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தகவல் வந்துள்ளது.

error: Content is protected !!