தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் ஏன்? – டெல்லி பல்கலை கழகம் விளக்கம்!

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் ஏன்? – டெல்லி பல்கலை கழகம் விளக்கம்!

மிழ் எழுத்தாளர்கள் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. டெல்லி பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்கலைக் கழகம் செயல்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், மொழிப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் படைப்புகள் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள பல்கலைக் கழக நிர்வாகம் இந்த விவகாரத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

இவர்களின் படைப்புகள் ஆங்கிலத் துறை பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின்னரே படைப்புகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றிற்குப் பதிலாக ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்தான் இது தொடர்பாக அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்கலைக் கழகம் செயல்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!