நேபாள நாட்டில் டிக்டாக்கை தடை செய்ய முடிவு!

நேபாள நாட்டில்  டிக்டாக்கை தடை செய்ய முடிவு!

ந்தியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக்- ஐ தடை செய்துள்ள நிலையில் நேபாளத்தின் புஷ்ப கமல் தஹால் அரசாங்கம் சீனாவிற்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் நேபாள அரசு டிக்டாக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.

நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டாக் தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் அடியாகும். ஏனெனில் நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேபாளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் டிக்டோக்கில் 1,629 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், டிக்டாக் மீதான தடை எப்போது அமல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் நேபாளத்தில் டிக்டாக் விரைவில் வேலை செய்வதை நிறுத்த வாய்ப்பு உள்ளது. நேபாளத்தில் தற்போது 22 லட்சம் டிக்டாக் பயனர்கள் உள்ளனர். சமீபத்தில், நேபாளத்தில் டிக்டோக்கில் சூதாட்டம் மற்றும் பந்தயம் கூட நடத்தப்படுவது தெரியவந்தது.

டிக்டாக்கில் அதிகரித்து வரும் மோசமான தன்மை காரணமாக நேபாளத்தின் பல மத மற்றும் கலாச்சார இடங்களில் டிக்டாக் வீடியோக்களை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இடங்களில் ‘நோ டிக்டாக்’ என்ற அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் மோசமான மற்றும் சமூக பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமின்றி, டிக்டாக்கில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இதற்கு முன்பே இந்தியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக்- ஐ தடை செய்துள்ளன. தெற்காசியாவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக டிக்டாக்-ஐ தடை செய்யும் மூன்றாவது நாடாக நேபாளம் மாறியுள்ளது. இந்தியா 2021 ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தானில் 2022 ஆம் ஆண்டிலும் டிக்டாக்- ஐ தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!