நம்ம தல தோனி & தன் ஒய்ஃபோட ‘எல்.ஜி.எம்’ பட ஆடியோ & டிரைலர் லாஞ்சுக்கு சென்னை வந்துள்ளார்!

நம்ம தல தோனி & தன் ஒய்ஃபோட ‘எல்.ஜி.எம்’ பட ஆடியோ & டிரைலர் லாஞ்சுக்கு சென்னை வந்துள்ளார்!

கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்றழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், இராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married” என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க, அவரே படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியும் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி வெளியிட உள்ளனர்

இதற்காக இந்தாண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாறி இருக்கும் தருணங்கள்… இந்த ‘எல் ஜி எம்’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று டிரைலர் & இசை வெளியீட்டுக்கு தோனியே வந்திருப்பதால் நகரெங்கும் ஒரு அதிர்வலை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல!

error: Content is protected !!