பயனுள்ள செயலியை உருவாக்கி Appscale Academy -க்கு விண்ணப்பியுங்கள்!

பயனுள்ள செயலியை உருவாக்கி Appscale Academy -க்கு விண்ணப்பியுங்கள்!

கூகுள் சிஇஓ  சுந்தர் பிச்சையை எப்படி சந்தித்தீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.

இதோ பதில்

AppScale அகாடமி, MEYIT ஸ்டார்ட்அப் இந்திய ஒலிபரப்புத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் Google Play ஆகியவற்றின் கீழ் உருவாக்கப்பட்டது, இந்த ஆப் ஸ்கேல் அகாடம வழியே இரண்டாம் நிலை, முன்றாம் நிலை நகரங்களில் இருந்து செல்பேசி செயலிகளை உருவாக்குபவர்களில் தேர்ந்தெடுத்து அதில் 100 நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை உலகளாவிய பயன்பாட்டுச் சந்தையில் வைக்க அவர்களுக்குப் பயிற்சி அளித்தது.

அந்த 100 நிறுவனங்களில் அக்ரிசக்தி நிறுவனமும் ஒன்று என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் பணிகளின் அடிப்படையில் திரு. சுந்தர் பிச்சையை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் உணர்வை வெளிப்படுத்த வார்த்தை இல்லை, இது என் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்றாகும்.

கூகுள் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டறிந்து, அவருக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியைச் சந்திக்க வாய்ப்பு அளித்தது, குறிப்பாக கிராமத்தில் இருந்து பணிபுரியும் மக்களுக்கு இது அதிக நம்பிக்கையை அளிக்கிறது. எனவே நீங்களும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

உங்களிடமும் அந்த சமுகத்திற்கு பயனுள்ளதாக செயலி உருவாக்கி இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது உடனே தயவுசெய்து இங்கே கிளிக் செய்து இணைப்பு மூலம் பதிவு செய்யவும்

நீங்களும் உலகம் முழுதுக்க பயணியுங்கள்…. என்னால் முடிந்த உதவியை நானும் செய்கிறேன்.

இணைப்பு

https://g.co/play/asa

செல்வமுரளி

error: Content is protected !!