சாக்கைக் கூத்து கலையின் நவீன வடிவம் தான் – இந்த காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா !

சாக்கைக் கூத்து கலையின் நவீன வடிவம் தான் – இந்த காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா !

ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, மிகப் பழமையான நகைச்சுவை பாணி களில் ஒன்று – காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நடுவர் கார்த்திக் குமார். இப்போது ரசிகர் களுக்கு மிகவும் பிடித்தமான, அமேசானின் அசல் தயாரிப்பு காமிக்ஸ்தானின் தமிழ் பதிப்பான காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகி விட்டது. உள்ளூர் பாணியை மேடையேற்றியிருக்கும் இந்த நிகழ்ச்சி ஸ்டான்ட் அப் காமெடி உலகில் ஒரு குறிப்பிட்ட புதிய அடியை எடுத்து வைத்துள்ளது.

இது பற்றி நடுவர் கார்த்திக் குமாரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “மிகப் பாரம்பரியமான, பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று தான் ஸ்டான்ட் அப் காமெடி என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும். நீங்கள் கவனித்தால் தெரியும், சாக்கைக் கூத்து இன்றும் பலரால் பயிற்சி செய்யப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு பாரம்பரிய கலை வடிவம். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சாக்கைக் கூத்து என்பது புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் ஒரு கூத்து வகையாகும். இக்கூத்தினை ஆடுபவர் சாக்கையர் எனப்படுவர். பண்டைத் தமிழகத்தில் ஆடப்பட்டு வந்த இக்கூத்து இன்றும் நடைபெற்று வருகிறது.கேரள மாநிலம் வட திருவாங்கூரில் உள்ள ஒவ்வொரு சிறப்புடைக் கோவிலிலும் நடைபெறும் விழா நாட்களில் சாக்கையர் கூத்து சிறப்பிடம் பெறுகிறது. கூத்து நடைபெறும் போது சொல்ல வந்த கதையுடன் பல்வேறு கிளைக்கதையை இடையில் கூறி கேட்போர் தமை மெய்மறக்கச் செய்யும் வகையில் இக்கூத்து நடைபெறும். கதை ,நகைச்சுவை, நடிப்பு ஆகியவற்றில் சாக்கையர் திறமை மிக்கவராவர்

அதற்கு இணையான நவீன வடிவம் தான் ஸ்டான்ட் அப் காமெடி. இது  நிறைய பேருக்கு தெரியாது. இன்றைய மொபைல் சூழ்  காலகட்டத்தில் இந்த வகை பொழுதுபோக்கை செய்து வருவதில், நகைச்சுவை யாளர்கள் நாங்கள் அதிகப் பெருமை கொள்கிறோம். நகைச்சுவையை விரும்பு பவர்கள் இன்னும் இந்த பாணி குறித்து தெரிந்து கொள்ள, திறமைகளை பாராட்ட எங்கள் நிகழ்ச்சி உதவும் என்று நம்புகிறேன்” என்கிறார் கார்த்திக் குமார்.

ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சி. இந்த புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவை பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர்கள் தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாகவோ அல்லது ராணியாகவோ தேர்வாகப் போட்டியிடுவார்கள்.  காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சி, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான நுணுக்கங்களை இரவல் பெற்று, உள்ளூர் ரசனையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு போட்டியாளரும் அவருக்கான பிரத்யேக பாணியில் நகைச்சுவை செய்ய உள்ளார் கள். தமிழின் 6 சிறந்த நகைச்சுவையாளர்கள் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பாவின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போடும் போட்டிக்கான முன்னோட்டத்தை ட்ரெய்லர் காட்டியது.  ஒன்லி  மச் லவுடர் தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். 11 செப்டம்பர் 2020ஆம் தேதி முதல், காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளை, அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள்.

Related Posts

error: Content is protected !!