ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்!- எடப்பாடி வேண்டுகோள்!

ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்!- எடப்பாடி வேண்டுகோள்!

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரததை மேம்படுத்தவும், தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிருட் டவும் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை கடந்த ஜூலை மாதம் துவக்கினார். இவ் இயக்த்தின் மூலம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பு மூலம் வரும் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயித்து முதல்கட்டமாக வரும் 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நடதிட்டமிட்டு அரசு மற்றும்விவசாயிகளுக்கு விழிப்புணவு ஏற்படுத்தவும், பங்களிப்பை அதிகரிப்பதற்காகவும் ஆங்காங்கே விஐபி-களின் ஆதரவுடன் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை , “தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயி ரூட்டவும், அதைச் சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக் குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில், அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், 35,00 கி.மீ. தொலைவுக்கு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.” என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதையொட்டி ஈஷா யோகா மையத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மரம் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சுற்றுச்சூழல் மாசு, நதிகளையும், வனங்களையும் பாதுகாத்தல், மரம் நடுதல் உள்ளிட்டவற்றின் பயனை எடுத்து க் கூறினார். இதையடுத்து, இதற்காக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு விளக்கினார்.

இதன் பிறகு, “காவேரி கூக்குரல்” குறித்து பேசிய அவர்,”காவேரி நதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், சத்குருஜி அவர்கள் “காவேரி கூக்குரல்” என்ற ஒரு இயக்கத்தை துவங்கியுள்ளது பெருமை அளிக்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டு க்கின்றேன். தலைக்காவேரியில் அவருடைய பயணத்தைத் துவக்கி வைத்து, இன்றைக்கு சென்னை வந்தடைந்திருக்கின்றார். வருகின்ற வழியெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இதுவரை 69,000 விவசாயிகள் வேளாண் காடுகள் குறித்து பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் அறிந்தேன். இந்த இயக்கத்தை அடுத்து வரும் 12 வருடங்களுக்குள் இதைப் படிப்படியாக மக்களிடம் பெரிய அளவில் எடுத்துச் செல்வார்கள் என்று அறிகிறேன். இவ்வியக்கத்தின் வாயிலாக 242 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டம் தீட்டியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. இந்தியாவிலேயே அதிக மரக்கன்றுகளை நடுகின்றவர் சத்குருஜி அவர்கள் தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உருவாக்க அம்மா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு, சத்குருஜி அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்களுடைய அரசு துணை நிற்கும் என்று சொல்லி, 242 கோடி மரங்களையும் நடுகின்ற பொழுது நிச்சயமாக இயற்கை வளம் பெருகும். அந்த இயற்கை வளம் பெருகின்றபொழுது நல்ல காற்று மற்றும் ஆரோக்யமான வாழ்வு கிடைக்கும். நல்ல மழையும் கிடைக்கும். அனைத்தும் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் நாம் 242 கோடி மரங்களையும் நட்டு நம்முடைய சத்குருஜி அவர்களின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்” என்றார்.

இந் நிகழ்வில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், காலநிலை மாற்றம் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மரத்தை நம்பிதான் பருவமழை நிலத்தடிநீர் அனைத்துமே இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தற்போது மனிதரில் புனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜக்கி வாசுதேவ் என்ற அவர், சத்குரு என்றாலே பிரமாண்டம்தான். ஜக்கி வாசுதேவ் ஆன்மீகப் பணியில் காண்பித்த பிரம்மாண்டத்தை தற்போது மக்கள் பணியிலும் காட்டி வருகிறார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜக்கி வாசுதேவ், காவேரி நதி மீட்டெப்பதன் மூலம், கர்நாடகாவும் தமிழ்நாடும் மீண்டும் சகோதரர்களாக ஆவார்கள் எனத் தெரிவிச்சார். மேலும், ‘பொழியும் மழை நீரில் கடந்த 100 ஆண்டில் எந்த விதமான பெரிய மாற்றமும் இல்லை. ஆனால் அந்த மழை நீர் போய் சேருவதில் தான் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மரங்களை நடுவது மூலமாக அந்த மழை நீர் நிலத்தடி நீரை சென்றடையும். மண் அரிப்பு குறைந்து, மண் வளம் பெருகும். உலகிலேயே மிகவும் மண் வளம் நிறைந்த பகுதி தென் இந்தியா. ஆனால் தற்போது அதை பாலைவனமாக மாற்றி வருகிறோம்.

மரம் வளர்ப்பது மூலமாக, அதன் இலை சருகுகள் காய்ந்து நிலத்தில் விழும்போது மண் வளம் பெருகும், மேலும் கால்நடைகளின் கழிவுகள்மூலமாக மட்டுமே மண் வளத்தை பெருக்க முடியும். நதிநீரை இணைப்பது குறித்து பல்வேறு பேச்சு வார்த்தை செல்கிறது. ஆனால் அவ்வாறு நதிகள் இணைக்கப்பட்டால் அனைத்து நதிகளும் அழிந்து விடும்.’ எனத் தெரிவிச்சார்.

Related Posts

error: Content is protected !!