பெண்களை கொலை செய்து உடலை ஆவி திருமணம் செய்யும் போக்கு!- சீனக் கொடுமை

பெண்களை கொலை செய்து உடலை ஆவி திருமணம் செய்யும் போக்கு!- சீனக் கொடுமை

சீனாவில் திருமணமாகாமல் இறந்து விடுவோர் தங்களின் உலக வாழ்க்கைக்குப் பின்னர் தனியாக இருக்க கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆவி திருமணம் நடத்தி வைக்கும் வழக்கம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பாரபமரியை நம்பிக்கையாகவும் அங்கு நடந்து வருகிறது. தொடக்கத்தில் திருமணம் ஆகாமல் இறந்துபோனோருக்காக மட்டுமே இத்தகைய ஆவி திருமணங்கள் நடைபெற்றன. பூமியில் வாழ்கின்ற ஒருவர், திருமணமாகாமல் இறந்துபோன தனித்தனி நபர்கள் இருவருக்கு செய்து வைக்கிற சடங்காக இந்த ஆவி திருமணம் முதலில் இருந்தது.ஆனால் இந்த் சடங்கு பின்னர் இறந்து போனவர்களுக்கு பூமியல் உயிருடன் இருப்பவர்களை திருமணம் செய்து வழக்கமாக மாறியது.

ghost aug 31

பூமியில் வாழ்கின்ற ஒருவரை, இறந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆவி திருமணத்தில், `மணமகளின்’ குடும்பத்தினர், மணமகளுக்கான கட்டணம் கோருவதோடு, நகைகள், வேலைக்காரர்கள், வீடு ஆகியவற்றை உள்ளடக்கிய, வரதட்சணை வழங்கப்படுவதும் இந்த சடங்கில் உள்ளது. ஆனால் அனைத்தும் காகித வடிவத்தில்தான்.

பாரம்பரியத் திருமணங்களில் உள்ளதைப்போல, வயது, குடும்பப் பின்னணி அம்சங்களும் இந்த ஆவி திருமணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.அதனால், இறந்தோரை வைத்து ஜோடிகளை உருவாக்குவதற்காக, குடும்பங்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்களையும் நாடுகிறார்கள்.

ஆவி மணமகன் மற்றும் ஆவி மணமகளின் இறுதிச் சடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் இந்த திருமண சடங்கில் வைக்கப்படுவதோடு, விருந்தும் நடைபெறுகிறது.ஆவி மணமகளின் கல்லறையில் இருந்து எலும்பைத் தோண்டி எடுத்து, ஆவி மணமகனின் கல்லறையில் வைப்பது தான் இந்த சடங்கில் மிகவும் முக்கியமான பகுதியாகும்.

சீனாவின் சில பகுதிகளில், இந்த சடங்கு முறைகள் மாற்றம் பெற்றுள்ளதற்கு பல ஆண்டுகளாக சான்றுகள் உள்ளன.ரகசியமாக நடைபெறும் சடங்குகளில், உயிரோடு வாழ்கின்ற மனிதருக்கும் இறந்தவருக்கும் திருமணம் நடைபெற்ற நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

ஆனால், இதையொட்டி பெரிய அளவிலான மனித உடல் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறத் துவங்கியதை எச்சரிக்கின்ற பல அறிக்கைகளும் உள்ளன.

இந்த் நிலையில் ஷாஅன்ஸி மாகாண காவல் துறையினர் மனநல பாதித்த 2 பெண்களை கொலை செய்ததாக சீனாவின் வட மேற்கு பகுதியில் ஒருவரை கைது செய்தனர். “ஆவி திருமணங்கள்” என்று கூறப்படும் சடங்கிற்கு அந்தப் பெண்களின் உடல்களை விற்பதற்காக அவர்களை கொலைகளைச் செய்ததாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது நடைபெறுவதற்கான காரணம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஷான்ஸி போன்ற சமீபத்திய கொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் சீனாவின் சில மாவட்டங்களில், சுரங்க அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிக திருமணமாகாத இளைஞர்கள் உள்ளனர். இத்தகைய பணியில் ஈடுபடுகின்ற போது உயிரிழப்புகள் அதிகமாக நடைபெறும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது.

குடும்பத்தின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிப்பதற்கு உழைக்கின்ற போது இறந்துவிட்ட மகனுக்கு, இறந்த ஒரு மணமகளை கண்டுபிடிப்பது அவர்களால் செய்யக்கூடிய நல்ல காரியமாக பார்க்கப்படுகிறது. இறந்த உறவினருக்கு காட்டும் நேசத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஈடு செய்கின்ற வடிவமாக இந்த ஆவி திருமணம் பங்காற்றுகிறது.

ஆனால், ஆண் – பெண் பாலின சமச்சீரின்மை விகிதமும் இதில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 100 பெண்களுக்கு 115.9 ஆண்கள் பிறப்பதாக 2014 – ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

error: Content is protected !!