சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,300 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என சீன அரசு தெரிவித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. அதில் பெய்ஜிங்கில் முதல் முறையாக ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300-ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது புதிதாக 1,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மற்றும் பல்கலை. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை நீடித்தும், வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!