கிரிமினல், ஊழல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகம் செய்யும் மத்திய அரசு!

கிரிமினல், ஊழல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகம் செய்யும் மத்திய அரசு!
நம் நாட்டில் ஊழல் ஒழிக்கப் பட வேண்டும் என்றும் கிரிமினல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாஜக அரசு ஒரு பக்கம் குரல் கொடுத்து வரும் நிலையில் கிரிமினல், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழக்கக்கூடாது. அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.அவர்கள் அப்பீல் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய மனு தாக்கல்செய்துள்ளது.
அதாவது கிரிமினல் வழக்கில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. தண்டிக்கப்பட்ட உடனேயே அவர் பதவியை தேர்தல் கமிஷன் பறிக்க வேண்டும் என்று கோரி லோக் பிரஹரி என்ற தொண்டுநிறு வனம் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு மத்தியஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தண்டிக்கப்பட் எம்.பி.,எம்.எல்.ஏ.க்களின் பதவிகளை உடனே பறிக்கக்கூடாது என்று மத்தியஅரசு வாதம் செய்துள்ளது.
கீழ்கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்பட்ட  காரணத்தினாலேயே ஒருவரது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற அரசுகள் கவிழ்ந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. தண்டிக்கப்பட்ட உடனேயே  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படத் தேவையில்லை.மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது.
சில வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் தடையாணை பெற்று தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள்.எனவே தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி பறிக்கப்படவேண்டும் என்பது நியாயமானது அல்ல  என்று மனுவில் மத்தியஅரசு கூறி உள்ளது.தண்டனை அடைந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்களை ஏன் தனி பிரிவாக கருத வேண் டும் என்பதற்கு மத்தியஅரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
error: Content is protected !!