பீகார் அரசு வெளியிட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு!

பீகார் அரசு வெளியிட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு!

ந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷார் காலத்தில் சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே இந்நாள் வரை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பின்னர் பல ஆண்டு காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது.

இதன்பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை என பாஜக அரசு தெரிவித்தது. இதுகுறித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார் . இந்நிலையில், பீகாரில் ஆளும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. தற்போது, பீகார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி பீகாரில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர், அவர்கள் மொத்தம் 81.99 சதவீதமாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 17.70 சதவீதத்தினரும், கிறிஸ்துவர்கள் 0.05 சதவீதத்தினரும், சீக்கியர்கள் 0.011 சதவீதத்தினரும், பௌத்தர்கள் 0.0851 சதவீதத்தினரும் மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் 0.0096 சதவீதத்தினரும் இருக்கின்றனர். இவர்களின் அடிப்படையில் பல்வேறு தரப்பிலான சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

சாதி அடிப்படையில்…

அதில், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீதத்தினரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36 சதவீதத்தினரும், பட்டியலிடப்பட்ட சாதி 19.65 சதவீதத்தினரும் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 1.6 சதவீதத்தினரும் பீகாரின் மக்கள் தொகையில் பங்களிப்பதாக அம்மாநில அரசால் தற்போது நடத்தப்பட்டுள்ள சாதி வாரியான கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும் மேலே குறிப்பிட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்கள் தான் சமூக ரீதியில் கடுமையான ஒடுக்குதலையும், தீண்டாமையையும் எதிர்கொள்கின்றனர். பொது குழுவினர் 16 சதவீதமாக உள்ளது. அதாவது அவை மேலே உள்ள எந்த குழுக்களையும் சேர்ந்தவை அல்ல.

பீகாரில் மிகவும் பொதுவாக காணப்படும் சமூகமான யாதவர்கள் 14.27 (OBC Category) சதவீதத்தை மக்கள் தொகையில் பங்களிப்பதாக இந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பிராமணர்கள் 3.6 சதவீதத்திலும், ராஜபுத்திரர்கள் 3.4 சதவீதத்திலும், குர்மிகள் 2.8 சதவீதத்திலும், குஷ்வாஹாக்கள் 4.2 சதவீதத்திலும், டெலிஸ் 2.8 சதவீதத்திலும் மற்றும் பூமிஹார்ஸ் 2.8 சதவீதத்திலும் உள்ளதாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முசாஹர்கள் மிகவும் ஏழ்மையான மற்றும் ஓடுக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாகும். இவர்கள் பீகார் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்காக இருக்கின்றனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, பீகாரின் மொத்த மக்கள் தொகையில் 63.1 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகும்

error: Content is protected !!