கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு!

னடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஸோஃபி கிரோகரி இருவரும் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் பிரிவதாக புதன்கிழமை அறிவித்தனர். பல மணிநேர அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கை மூலம் இருவரும் தெரிவித்துள்ளர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2005 ஆம் ஆண்டு மே மாதம் சோஃபி கிரிகோயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 15 வயதில் ஜேவியர், 14 வயதில் எல்லா-கிரேஸ் மற்றும் 9 வயதில் ஹட்ரியன் ஆகிய மொன்று குழந்தைகள் உள்ளனர். கனடாவில் பிரதமராக பதவியில் இருக்கும் போது மனைவியை பிரிந்த இரண்டாவது பிரதமர் ட்ரூடோ ஆவார். அவருக்கு முன், அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான பியர் ட்ரூடோ 1979 இல் அவரது மனைவி மார்கரெட்டிடமிருந்து பிரிந்தார். இருவரும் 1984 இல் விவாகரத்து பெற்றனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி அவரது குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பலமுறை பகிரங்கமாகப் பேசியுள்ளார். அத்துடன் பிரதமர் ஜஸ்டினும், சோஃபியும் சிறு வயது நண்பர்கள், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். 2015-ம் ஆண்டு ஜஸ்டின் கனட பிரதமராக போட்டியிட்டபோது அவருக்காக சோஃபியும் பல இடங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தற்போது இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பிரதமர் ஜஸ்டின், தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வணக்கம், சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நாங்கள் கலந்து ஆலோசித்து இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். இது எப்போதுமே தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்த பிறகு இருவரின் கவனமும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும். ட்ரூடோ குடும்பமும் அடுத்த வாரம் விடுமுறைக்கு செல்லவுள்ளது. விவாகரத்துக்குப் பிறகு, இருவரும் குழந்தைகளின் கூட்டுக் காவலில் இருப்பார்கள். சோஃபி அதிகாரப்பூர்வமாக ஒட்டாவாவில் வசிக்கிறார். எனினும், குழந்தைகளின் கவனிப்பு காரணமாக, அவரது பெரும்பாலான நேரம் பிரதமர் இல்லத்திலேயே செலவிடப்படும்.

error: Content is protected !!