முப்பது ஆண்டுகளாக இல்லாத அளவில் சரிந்தது பங்குச் சந்தை! – ஏன்?

முப்பது ஆண்டுகளாக இல்லாத அளவில் சரிந்தது பங்குச் சந்தை! – ஏன்?

கச்சா எண்ணெய் விலை குறைவு, கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி மற்றும் வங்கிகள் குறித்தான் அச்சம் ஆகியவற்றால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இரண்டாயிரத்து 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. இது முப்பது ஆண்டுகளாக சந்திக்காக சரிவாகும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகம் முழுவதும் ஏற்கனவே பங்குச் சந்தைகள் மந்தமாக செயல்பட்டு வந்த சூழ்நிலையில், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் குழுமமான ஒபெக் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கால் தொடர் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அத்துடன் இந்தியாவை பொறுத்தவரை, மேற்கண்ட காரணங்களோடு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள யெஸ் பேங்கின் பங்குகளின் வீழ்ச்சியால், வங்கித்துறை யில் முதலீடு செய்தவர்களிடையே பதற்றம் காணப்படுவதும் மற்றொரு காரணமாக உள்ளது.

இதனால் சந்தை தொடங்கிய சில மணிநேரங்களில், கச்சா எண்ணெயின் விலை 31 சதவீதம் குறைந்ததை அடுத்து இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் சந்தைகள் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. அதாவது, கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போருக்கு பிறகு, முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 14 டாலர் குறைந்து 31 டாலராக உள்ளது. ஒரே நாளில் எண்ணெய் விலை 31 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததால் உலக அளவில் பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. . பிற்பகல் ஒன்றரை மணி அளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 443 புள்ளிகள் வரை சரிந்து 35 ஆயிரத்து 132 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 648புள்ளிகள் வரை சரிந்து பத்தாயிரத்து 341 ஆக இருந்தது. ஓன்ஜிசி பங்குவிலை 11 விழுக்காடும், வேதாந்தா பங்கு விலை பத்து விழுக்காடும் வீழ்ச்சி யடைந்தது. அதேநேரத்தில் பாரத் பெட்ரோலியம் பங்குவிலை பத்து விழுக்காடும், இந்தியன் ஆயில் நிறுவனப் பங்குவிலை 3 விழுக்காடும் உயர்ந்துள்ளது.

error: Content is protected !!