அரிமாபட்டி சக்திவேல் – விமர்சனம்!

அரிமாபட்டி சக்திவேல் – விமர்சனம்!

வீனமயமாகி விட்ட இவ்வுலகில் மேற்கத்திய கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் ஏற்றுக்கொள்ளும் நமது சமூகம் கலப்புத் திருமணத்தை மட்டும் இன்றுவரை பல நகரம் மற்றும் கிராமங்களில் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கின்றது. ஒரு கிரகத்திலிருந்து வேற்றுக்கிரகத்திற்கு சந்திராயன் அனுப்பி இரு கிரகங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்த நினைக்கும் இந்திய சாதிய சமூகம் இரு சாதிகளுக்குள் தொடர்பை ஏற்படுத்த விரும்பாதது விந்தையான நிதர்சனம்தான். இப்படியான சூழலில் ரமேஷ் கந்தசாமி என்பவரது டைரக்‌ஷனில் சார்லி, பவன், மேகனா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் நிஜமான சாதி வெறி பிடித்த கிராமம் ஒன்றின் படமாக அரிமாபட்டி சக்திவேல் என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள்..ஆனால் சொல்ல வந்த விஷயத்துக்கு போதுமான அழுத்தத்தைக் கொடுக்கும் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.

அதாவது திருச்சி அருகே அரிமாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன் சக்திவேல்(பவன்). இவர்களது குடும்பம் அக்கிராமத்தில் ஒரு மூத்தகுடி குடும்பமாக பார்க்கப்படுகிறது. அக்கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள்/இளைஞிகள் யாரேனும் வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த யாரேனும் காதலித்து திருமணம் செய்தால், அவர்களை அக்கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது. அதனையும் மீறி திருமணம் செய்து அக்கிராமத்தில் வாழ்ந்தால், அவர்களை கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அடிசினல் இன்பர்மேஷன். இந்நிலையில், ஹீரோ சக்திவேல் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நாயகியான மேகனாவை காதலிக்கிறார். வழக்கம் போல் ஆரம்பத்தில் ஒரு தலை காதலானது இருதலை காதலாக மாறியதையடுத்து வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்று தனது நண்பர்களின் துணையோடு பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களது திருமணம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதை தொடர்து பவன் அப்பாவான சார்லியை பஞ்சாயத்தில் நிறுத்தி ஊர் மக்கள் கேள்வி கேட்கின்றனர். “உனக்கு ஊர் மக்கள் வேண்டுமா மகன் வேண்டுமா” என்று முடிவு செய் என்கிறார்கள். “ஊர் மக்கள் தான் வேண்டும்” என்று சார்லி சொல்ல இதையடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் சார்லிக்கு கட்டுப்பாடு விதிக்கிறார்கள். அதாவது மகனுடன் பேசக்கூடாது, சொத்து எழுதி தரக்கூடாது, அவனை ஊருக்குள் அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு நீ ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தண்டனை தர அதனை தந்தை ஏற்றுக்கொண்டு செய்கிறார்.. மேரேஜ் ஆகி மனைவியுடன் வெளியூரில் வசிக்கும் ஹீரோ பவன் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கோபத்துடன் தன் அப்பாவைக் காண கிராமத்துக்கு வருகிறார்.. வந்த இடத்தில் ஊர் மக்கள் அவரை அடிக்கின்றனர். அவர்களை திருப்பித் தாக்கி விட்டு ஊரிலிருந்து வெளியேறுகிறார் பவன். இந்த நிலையில் ஜாதி வெறி பிடித்த பெண் வீட்டு குடும்பத்தார் ஹெலன் மற்றும் பவனை பழி வாங்க ரவுடிகளை அனுப்பி வைக்கின்றனர். இதன் முடிவு என்ன? ரவுடிகளின் தாக்கு தலுக்கு ஹெலன் பலியானாரா?. மீண்டும் ஊருக்கு திரும்ப முடிந்ததா? பஞ்சாயத்து தண்டனையை ஏற்று அனுபவித்த பவன் தந்தை கதி என்ன ? என்ற பல்வேறு கேள்விகளுக்கு நிஜத்தின் பின்னணியில் கிளைமாக்ஸ் பதில் அளிப்பதே இப்படத்தின் கதை .

ஹீரோவான பவன், சக்திவேலாக வருகிறார், போகிறார்.. . நிஜக் கதையின் நிஜ நாயகன் என்பதால் திரைக்கான மொழி தெரியாமல் சங்கடப்படுத்துகிறார். நாயகி மேகனா அழகாக தோன்றி பல இடங்களில் அதிகமாகவே ஸ்கோர் செய்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்து கவனிக்க வைக்கிறார். மூத்த நடிகர்களான சார்லி, அழகு, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாகவே செய்து முடித்திருக்கிறார்கள். சில இடத்தில் சார்லியின் ஓவர் ஆக்டிங்கை அப்பட்டமாக வெளிப்பட்டு முகத்தையே சுளிக்க வைத்து விடுகிறது. . க்ளைமாக்ஸ் காட்சிக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.ஹெலன் அண்ணனாக நடித்திருக்கும் பிர்லா போஸ் சாதித் திமிரை கோபம் வரும் அளவுக்கு வெளிப்படுத்தி வேடத்தை வில்லத்தனம் ஆக்கி இருக்கிறார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு மோசமில்லை..

என்றாலும் அரிமாபட்டி சக்திவேல் – நேர விரயம்

மார்க் 2.25/5

error: Content is protected !!