விஜய் சொன்ன குட்டிக் கதைக்குப் பின்னால் இன்னொரு கதை!

விஜய் சொன்ன குட்டிக் கதைக்குப் பின்னால் இன்னொரு கதை!

டைரக்டர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார். அந்த ஸ்டோரிக்கு பின்னாலும் ஒரு ஸ்டோரி உண்டாக்கும்.

அதுக்காக இந்நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்ட் ரைட்டர் முதலில் ரெடி செஞ்ச கதை இதுவாம் : ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்துச்சு.ஜென் குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும் மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும், தனக்கு மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு,”ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,”என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல்,’எடுத்தக் கொள்ளுங்கள் குருவே,”என்றார்.

குரு,”நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?”என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.

உடனே குரு தயங்காம,”எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்?நீ என்னிடமே வேலை பார்க்கலாமே?என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா.ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,”என்று சொல்ல மன்னனும் ஓ கே சொன்னார்.

ஒரு வருசம் கழிச்சு குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,”நாடு எப்படி இருக்கிறது?வரவு செலவு எப்படி இருக்கிறது?நீ எப்படி இருக்கிறாய்?”என்று கேட்டார்.

மன்னனும்,”நாடு சுபிட்சமாக இருக்கிறது.நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன்.இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,” அப்ப்டீன்னு சொன்னார்.

குரு,”அதற்கு அவசியமில்லை.நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால் இந்த நாடு, ‘என்னுடையது’என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதி இல்லை. இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,”என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை பெற்றார்.அப்படீன்னு இருந்த கதை ஏனோ சன் குரூப்-புக்கு பிடிக்காம போயிடுச்சாம்

அதுனாலே புது குட்டி ஸ்டோரி ரெடியாச்சாம்

அந்த ஸ்டோரி என்னா-ன்னு கேக்கறீங்களா? அது இதுதான்

காற்று எப்படிலாம் பயன்படுதுன்னு ஒரு கதை படிச்சேன். ஒரு நாள், புட்பால் கேட்டுதாம், புல்லாங்குழலைப் பார்த்து, ’இங்க பாரு எனக்குள்ளயும் காத்துதான் இருக்கு, ஒனக்குள்ளயும் காத்துதான் இருக்கு. உன்னை உதட்டுல வச்சு முத்தம் கொடுக்கிறாங்க, என்னைத் தூக்கிபோட்டு மிதிக்கிறாங்க, ஏன்? அப்படின்னு கேட்டுச்சாம்.

அதுக்கு புல்லாங்குழல் சொல்லுச்சாம், ‘ரொம்ப சிம்பிள். நீ வாங்குற காற்றை எல்லாம் நீயே வச்சுக்கிற. யாருக்கும் கொடுக்க மாட்டேங்கிற, அதனால உதை வாங்குற. ஆனா நான், எனக்குள்ள வர்ற காற்றை இசையா மாத்தி மத்தவங்களுக்கு கொடுக்கறேன். மத்தவங்களுக்கு கொடுக்கிறவங்க முத்தமிடப்படுவாங்க. உதவாம சுயநலமா இருந்தா உன்னை மாதிரி மிதிதான் வாங்குவாங்க. அதனால இனிமேலாவது நாலு பேருக்கு பயன்படு, சரியா?ன்னு போயிடுச்சாம் புல்லாங்குழல். அதனால புட்பாலை விட புல்லாங் குழலா இருக்க, நாம ட்ரை பண்ணலாம்’.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார். இந்த கதை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

error: Content is protected !!