கேரளா கல்விக் கூடத்தில் புரட்சி – அங்கன்வாடியில் 3 தலைமுறையினருக்கும் இடம் தரும் 3 ஜி ஸ்கீம் !

கேரளா கல்விக் கூடத்தில் புரட்சி  –  அங்கன்வாடியில் 3 தலைமுறையினருக்கும் இடம் தரும் 3 ஜி  ஸ்கீம் !

போன 1999 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமை யை கேரளா பெற்றது. கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கேரளா முழு தொடக்க கல்வி அறிவு பெற்ற மாநிலமாக ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அறிவித்தார். இதுபோன்று, கேரளா கல்வியில் பல சாதனை படைத்துள்ள கேரளா வில். அடுத்தடுத்து அங்குள்ள பொதுக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னரே குறிப்பிட்டது போல் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதலே ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டன. அதேபோல 6ம் வகுப்பு முதல் தேசிய பாடத்திட்டத்திற்கு இணையான பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கேரள பொதுக்கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 9ம் வகுப்புவரை கடந்த வருடத்தை விட 1 லட்சத்து 45 ஆயிரத்து 208 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும் 12 ஆயித்து 198 மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தான் அதிக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.இதேபோல அரசு நடத்தும் அங்கன்வாடி களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. வழக்கமாக அங்கன்வாடி களில் 2 முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அவர்க ளுக்கு ஆடல், பாடலுடன், சிறிது கல்வியும் பயிற்றுவிக்கப்படும். காலையிலும், மதியமும் தரமான உணவும் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கன்வாடிகள் என்றால் சிறு குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற வழக்கமான பாணியை மாற்ற கேரள அரசு தீர்மானித்துள்ளது. குழந்தை களுடன், வாலிப வயதுள்ள இளம்பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் ஆன பெண்கள் ஆகியோ ருடன் சேர்த்து 3 தலைமுறையும் பயன்பெறும் வகையில் அங்கன்வாடிகள் மாற்றப்படுகிறது. ‘3ஜி’ என பெயரி டப்பட்டுள்ள இந்த திட்டம் கேரளாவில் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

இதன்படி குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் 60 வயதான பெண்கள் ஆகியோர் அங்கன்வாடிகளில் சேரலாம். இதற்காக கேரளா முழுவதும் 120 அங்கன்வாடிகளில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு சத்துணவு, கல்வி, பாட்டு, நடனம், இசை, ஓவியம் போன்ற கலைகள், பயிற்றுவிக்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் அங்கன்வாடிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கலைகளை பயிற்றுவிக்கலாம். இளம்பெண்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, வாழ்க்கை முறைகள், நூலகம் மற்றும் இன்டர்நெட் வசதி, சுகாதாரம் குறித்த வகுப்புகள், தொழில்முறை பயிற்சி வகுப்புகள், போட்டித் தேர்வு வகுப்புகள், 10 மற்றும் 12ம் வகுப்பு படிப்பவர்களுக்கு டியூஷன், திருமணமான பெண்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சமையலறை பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படும். 60 வயதுக்கு மேல் ஆன பெண்கள் அங்கன்வாடிகளுக்கு சென்று ஓய்வெடுக்க வசதி ஏற்படுத்தப்படும். தனிமையில் வாடுபவர்களும் இங்கு சென்று வரலாம். வாசிப்பதற்கு, பத்திரிகைகள், புத்தகங்கள், உணவு மற்றும் இலவச மருத்துவ பரிசோதனையும் இந்த அங்கன்வாடிகளில் கிடைக்கும். உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள சமூக நீதித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நம் தமிழ்நாட்டில் வெட்டியான அஏஇவிப்புகள் மட்டுமே தொடர்கிறது என்பதுதான் சோகம்!

Related Posts

error: Content is protected !!